ஒரு வருஷத்துல 20 படமா.?! இந்த லிஸ்ட்ல கமல், ரஜினியை முந்திய அந்த ஹீரோ யாரு.?!
தற்போதெல்லாம் ஒரு ஹீரோ ஒரு வருடத்திற்கு ஒருபடம் வெளியிடுவதே குதிரைக்கொம்பாக இருக்கின்றது. தற்போது ரசிகர்களின் மனநிலை மாறிவிட்டது. எந்த படம் எடுத்தாலும் ஹீரோவுக்காக ஓடுவதெல்லாம் அந்த காலம். தற்போது கதை நன்றாக இருக்க வேண்டும், அந்த கதையை விறுவிறுப்பாக சொல்லப்பட வேண்டும், அப்படி இருந்தால் மட்டுமே அந்த படம் வெற்றி அடையும்.
ஆனால் 90, 80 காலகட்டங்களில் எல்லாம் இந்த கணக்கு கிடையாது. நல்ல கதை மட்டும் சொல்ல தெரிந்தால் மட்டும் போதும். பிரமாண்ட காட்சிகளோ எதுவம் தேவையில்லை. இளையராஜாவின் இசையில் நான்கு பாடல்கள், நான்கு சண்டை காட்சிகள் மட்டும் இருந்தால் போதும் படம் ஹிட்டாகி விடும்.
அப்படித்தான் ரஜினி, கமல் ஆரம்பித்து விஜயகாந்த், மோகன், கார்த்தி, பிரபு, சத்யராஜ் என பலரும் ஒரு வருடத்தில் பல படங்களில் நடித்துள்ளனர். அப்படி, ஒரு வருடத்தில் அதிகமாக நடித்து ஐந்தாவது இடத்தில் இருப்பவர் மோகன் 1984 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் மட்டும் 19 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் பல படங்கள் ஹிட்டாகியுள்ளன.
அடுத்ததாக நான்காவது இடத்தில் ரஜினிகாந்த் 1978 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் 21 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. முள்ளும் மலரும், அவள் அப்படித்தான் போன்ற தரமான படங்கள் அந்த வருடத்தில் தான் ரிலீசானது.
அடுத்ததாக கமல்ஹாசன் 1978ஆம் ஆண்டு, 20 படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வருடம் தான் மரோ சரித்ரா (தெலுங்கு) சிகப்பு ரோஜாக்கள் போன்ற மெகா ஹிட் படங்கள் வெளியாகியுள்ளன. மேலும் பல படங்கள் ஹிட் ஆகியுள்ளன.
இதையும் படியுங்களேன் - அப்போ அந்த லிப் லாக் முத்தம் உண்மைதானா.?! திரை மறைவு ரகசியம் இதுதானாம்.!
அடுத்ததாக விஜயகாந்த் 1984 மொத்தமாக 18 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் வைதேகி காத்திருந்தால் நூறாவது நாள் போன்ற சூப்பர் ஹிட் படங்களும் அடங்கும். இவர் இன்னோர் சாதனைக்கு சொந்தகாரர். ஆம், தமிழில் வெறும் ஹீரோவாக மட்டுமே நடித்து 18 படங்களை ஒரே வருடத்தில் ரிலீஸ் செய்துள்ளார். மற்ற ஹீரோக்கள், வேற்று மொழி படங்கள், குணச்சித்திரம், வில்லன் என மாற்றி மாற்றி நடித்திருந்தனர். ஆனால் விஜயகாந்த் அப்படி இல்லை.
முதலிடத்தில் நடிகர் சத்யராஜ் இவர் ஹீரோ வில்லன் என கலந்து கட்டி அடித்து 1985ஆம் ஆண்டு மட்டுமே 28 படங்களில் நடித்து முதலிடத்தில் உள்ளார்.