டல்லடிக்கும் முன்பதிவு!.. வீர தீர சூரனுக்கு ஆப்பு வைக்கும் ரெட் ஜெயண்ட்?!.. ஐயோ பாவம்!…

Published On: March 24, 2025
| Posted By : சிவா
veera dheera

Veera Dheera Sooran: ஒரு திரைப்படத்தை உருவாக்குவது விட அதை சரியான நேரத்தில் நிறைய தியேட்டர்களில் வெளியிடுவதுதான் வியாபார யுக்தி. அதேபோல், இப்போதெல்லாம் ஒரு படத்தை சமூகவலைத்தளங்கள் மூலம் அதிக அளவில் புரமோஷன் செய்தால்தான் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள். எனவே, ஒரு குறிப்பிட்ட தொகையை தயாரிப்பாளர் தரப்பு ஒதுக்க வேண்டும். அப்படி செய்யவில்லை எனில் படம் பெரிய வசூலை பெறாமல் போகும் நிலைதான் இருக்கிறது.

அதேபோல், எந்த படமும் இல்லாமல் தனியாக ரிலீஸ் ஆனால் ஒரு சுமாரான படம் கூட ஹிட் அடிக்கும். அதேசமயம் ஒரு பெரிய நடிகரின் படம் வெளியானால் சின்ன படங்கள் ஒதுங்கிவிடும். ஏனெனில் பெரும்பாலான தியேட்டர்கள் பெரிய ஹீரோவின் படங்களுக்கு ஒதுக்கிவிடுவார்கள். அதிலும், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் ஒரு படத்தை வெளியிட்டால் மொத்த தியேட்டர்களும் அந்த படத்திற்கு ஒதுக்கப்பட்டுவிடும்.

VeeraDheeraSooran

அதனாலேயே விஜய், ரஜினி போன்ற நடிகர்கள் தங்கள் படங்கள் ரெட் ஜெயண்ட் வெளியிட்டால் நல்லது என நினைப்பார்கள். அதுதான் நடந்தும் வருகிறது. இப்போது ரெட் ஜெயண்ட் நிறுவனத்தால் சியான் விக்ரமின் வீர தீர சூரன் படம் பிரச்சனையில் சிக்கி இருக்கிறது. வீர தீர சூரன் படம் வருகிற 27ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை அருண் இயக்கியுள்ளார். ஒரு இரவில் நடக்கும் கதை என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் இருக்கிறது.

ஒருபக்கம் அதே 27ம் தேதி பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படமும் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. எனவே, முக்கிய மற்றும் அதிக தியேட்டர்கள் இப்படத்திற்கு ஒதுக்கப்பட்டால் வீர தீர சூரனுக்கு குறைவான தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக முன்பே செய்திகள் வெளியானது.

empuraan
#image_title

மேலும், எம்புரான் படத்திற்கு பின் தக் லைப், கூலி, இட்லி கடை போன்ற படங்களையும் ரெட் ஜெயண்ட் நிறுவனவே வெளியிடவுள்ளது. எனவே, எம்புரான் படத்தை வாங்கும் தியேட்டர்களுக்கே இந்த படங்களையும் அவர்கள் கொடுப்பார்கள். அதாவது, வீர தீர சூரன் படத்தை வெளியிடும் தியேட்டர்களுக்கு அந்த படங்கள் கிடைக்காது எனவும் சொல்லப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் தரப்பு உதயநிதியிடம் பேச்சுவார்த்தை நடத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் போலவே எம்புரான் படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்திற்கு அதிக அளவில் முன் பதிவும் நடந்து வருகிறது. ஆனால், சரியான தியேட்டர்கள் இன்னும் அமையவில்லை என்பதால் வீர தீர சூரனுக்கு முன்பதிவு மிகவும் மந்தமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.