Connect with us
empuraan

Cinema News

விஜய், அஜித்தை தாண்டிய மோகன்லால்!.. முன்பதிவில் பட்டையை கிளப்பும் எம்புரான்!..

Empuraan : மலையாள சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் மோகன்லால். 46 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். 1978ம் வருடம் தனது 18வது வயதில் மலையாள படங்களில் நடிக்க துவங்கினார். அதன்பின் பல வருடங்களாக நடித்து பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். பல விருதுகளையும் இவர் வாங்கியிருக்கிறார்.

ரஜினி, கமல் போன்றவர்களுக்கும் பிடித்த நடிகராக மோகன்லால் இருப்பதே அவரின் சிறப்பு. மலையாள சினிமா உலகில் மம்முட்டி – மோகன்லால் இருவருமே சீனியர் நடிகர்களாக இருந்தாலும் இப்போதும் கதாநாயகனாக நடித்து வருகிறார்கள். அதிலும், மோகன்லால் கடந்த 10 வருடங்களில் பக்கா ஆக்சன் ஹீரோவாக மாறிவிட்டார்.

இவர் நடிக்கும் படங்களில் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக உருவாக்கப்பட்டு வருகிறது. இப்போது இவருக்கு கேரளாவில் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. தமிழிலும் இருவர், சிறைச்சாலை, ஜில்லா, காப்பான், உன்னைப்போல் ஒருவன், ஜெயிலர் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ரஜினிக்கு நல்ல நண்பர் இவர்.

empuraan

#image_title

அதனால்தான் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள எம்புரான் படத்தின் ட்ரெய்லர் வீடியோவை ரஜினியே சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இந்த படத்தை நடிகர் பிரித்திவிராஜ் இயக்கியுள்ளார். ஏற்கனவே பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து 2019ம் வருடம் வெளியான லூசிபர் படத்தின் 2ம் பாகம் போல எம்புரான் படம் உருவாகியிருக்கிறது.

இந்த படம் வருகிற 27ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தோடுதான் விக்ரமின் வீர தீர சூரன் படமும் வெளியாகிறது. ஆனால், எம்புரான் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் Bookmyshow இணையதளத்தில் 645 ஆயிரம் டிக்கெட்டுகள் (6.45 லட்சம்) புக் செய்யப்பட்டிருக்கிறது.

இதுவரை இந்திய சினிமாவில் எந்த படத்திற்கும் ஒரே நாளில் இவ்வளவு டிக்கெட்டுகள் ஆன்லைனில் புக் செய்யப்பட்டதில்லை என்கிறார்கள். கோலிவுட்டில் விஜய், அஜித் படங்களுக்கு கூட இவ்வளவு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படவில்லை என சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top