விஜய் மட்டும்தான் நன்றியோடு இருக்கார்.. அவங்கலாம் நன்றி கெட்டவர்கள்! - கோபத்தில் வெடிக்கும் திருப்பூர் சுப்ரமணியன்

by prabhanjani |   ( Updated:2023-08-01 09:27:59  )
விஜய் மட்டும்தான் நன்றியோடு இருக்கார்.. அவங்கலாம் நன்றி கெட்டவர்கள்! - கோபத்தில் வெடிக்கும் திருப்பூர் சுப்ரமணியன்
X

முன்பெல்லாம் பெரிதாக நடிகர்கள் யாரும் படம் தயாரிக்க மாட்டார்கள். ஆனால் இப்போது பல நடிகர்கள் படம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்திய பேட்டி ஒன்றில் பல தகவல்களை தெரிவித்துள்ளனர். ஆரம்ப காலத்தில் ஒரு நடிகரை வளர்த்து விட்ட தயாரிப்பாளரை மறந்துவிட்டு, அவர்கள் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து, அவர்களே படத்தை தயாரித்து நடித்துக்கொள்கின்றனர்.

vijay

அந்த படங்களை ஓடிடி தளங்களுக்கு கொடுத்து பணம் சம்பாதித்துக் கொள்கின்றனர். நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மட்டும் தான் சொந்த பணத்தை போட்டு, விஜயை ஹீரோ ஆக்கினார். ஆனாலும் கூட அவர் இன்று வரை படம் தயாரிக்கவில்லை. ஆனால், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் தங்களை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்களை மறந்துவிட்டு, அவர்களே தயாரித்து நடித்துக்கொள்கின்றனர்.

அப்படி செய்வதாக இருந்தால், அதனை முதல் படத்திலேயே செய்திருக்க வேண்டும். இப்படி மற்ற தயாரிப்பாளரின் பணத்தில் நடித்து பேரும், புகழும் பெற்ற பிறகு, நானே தயாரித்து நானே நடித்துக்கொள்வேன் என்று கூறுவது அநியாயம். படம் தயாரிக்க தொடங்கிய பிறகு அந்த நடிகர்கள், வேறு தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க மறுத்துவிடுகின்றனர். இதனால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

sk

கை தூக்கி விட்டவர்களை கஷ்டப்பட வைத்துவிடுவது தவறான செயல். இவர்கள் மட்டுமல்ல, இதே போல இன்னும் பலர் இருக்கிறார்கள். ஒரு சிலர் தயாரித்து பார்த்து, முடியாமல் தடுமாறி விட்டுவிடுகின்றனர். முதல் படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்து பெரிய ஆள் ஆக்கியவர்களை மறந்துவிட்டு, நன்றி கெட்டு செயல்படுகின்றனர். அவர்களே நடித்து, தயாரித்து, வரும் லாபம் முழுவதையும் தாராளமாக எடுத்துக்கொள்ளட்டும். ஆனால் அதை முதல் படத்திலிருந்தே செய்திருக்க வேண்டும். நன்றாக வளர்ந்த பிறகு செய்யக்கூடாது என்று திருப்பூர் சுப்ரமணியம் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- அந்த கவுண்டமணி காமெடி படுகேவலம்.. ஆனா யாருமே அத கேக்கல- பொங்கிய ஆர்.ஜே.பாலாஜி

Next Story