பெரிய ஸ்டார் இல்ல.. பெரிய இயக்குனரும் இல்ல!.. ஆனாலும் மாஸ் ஹிட் அடித்த படங்களின் பட்டியல்..
தமிழ் சினிமாவின் போக்கே சமீபகாலமாக மாறிவருகிறது. அதாவது காலங்காலமாக ஒரு பெரிய ஹீரோவை நம்பித்தான் சினிமா இருந்து வந்தது. எம்ஜிஆர்,சிவாஜி படங்களை ஓடிப் போய் பார்த்த காலம் போய் இப்பொழுது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலைமைக்கு ஆளாகிவிட்டனர் ரசிகர்கள். அந்த வகையில் கதைக்காகவே ஓடிய படங்களின் வரிசை பட்டியலை தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.
ராஜதந்திரம் : சத்தமே இல்லாமல் தமிழ் சினிமாவை 2016 ஆம் ஆண்டு ஒரு உலுக்கு உலுக்கிய படமாக அமைந்தது ராஜ தந்திரம் திரைப்படம். ஒரு மூன்று இளைஞர்கள் சேர்ந்து பெரிய நகைக் கடையில் திருடும் சம்பவத்தை அடிப்படையாக அமைந்த இந்தப் படத்தில் த்ரில்லருக்கும் பஞ்சமில்லாமல் கதையை அற்புதமாக நகர்த்திருப்பார்கள். படம் மக்கள் மத்தியில் இன்றளவும் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
மாநகரம் : படத்தின் இயக்குனர் லோகேஷ் இப்போது வேண்டுமென்றால் பெரிய இயக்குனராக இருக்கலாம். ஆனால் இந்தப் படத்தை எடுக்கும் போது அவர் ஒரு சாதாரண இளைஞராக தான் இருந்தார். இரு வெவ்வேறு கதைக்களம் கொண்ட இளைஞர்களை எப்படி காட்சிக்கு காட்சி வித்தியாசப்படுத்தி காண்பிக்க வேண்டும் என்பதில் மிகவும் கதையை கவனமாக கையாண்டிருக்கிறார் லோகேஷ்.
எட்டுத் தோட்டாக்கள்: இந்தப் படம் இரு போலீஸ்காரர்களுக்கு இடையே நடக்கும் திரில்லர் சப்ஜெக்ட் கலந்த திரைப்படமாகும். ஒரு போலீஸால் தொலைத்த தோட்டாவை இன்னொரு போலீஸ் எப்படி அதை எடுத்து கையாள்கிறார் என்பதை அடிப்படையாக கொண்டு அமைந்த திரைப்படம் தான் எட்டுத்தோட்டாக்கள். இந்தப் படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப் பெற்றது.
மரகத நாணயம் : மரகத நாணயத்தை எப்படி கொள்ளையடிக்கலாம் என்பதே இந்தப் படத்தில் ஒன் லைன் கதை. படத்தில் ஆதி ஹீரோவாக இருந்தாலும் நடிகர் முனீஸ் காந்த் ஒரு கட்டத்தில் படத்தின் திருப்பு முனைக்கே காரணமாக இருக்கும் பட்சத்தில் படம் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும். இந்தப் படம் வெளியான சமயத்தில்தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாக இந்த படம் அமைந்தது.
ஜீவி: முக்கோணவியல் சப்ஜெக்டை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் ஜீவி. படத்தை பார்க்கும் அனைவருக்கும் எங்கேயோ குழப்பம் இருக்கிற மாதிரி இருந்தாலும் அந்த குழப்பம் தெரியாதவாறு திரில்லர் கதைக் களத்தோடு படத்தை நகர்த்தியிருப்பது தான் கூடுதல் சிறப்பம்சம் ஆகும். ஜீவி படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் வெளிவந்தது. ஆனால் முதல் பாகம் கொடுத்த சர்ப்ரைஸை இரண்டாம் பாகம் கொடுக்கவில்லை.
இதையும் படிங்க : இயக்குனர் ஹீரோ எல்லாரும் படுக்க கூப்புடுவாங்க! – கண்ணீர் விட்ட கடைக்குட்டி சிங்கம் பட நடிகை..