பிளேபாய் நடிகருடன் 2 படங்கள்!. ஆனாலும் கிரேட் எஸ்கேப் ஆகிய பிரபல நடிகை...

by prabhanjani |   ( Updated:2023-08-03 07:50:49  )
pbs
X

இயக்குநராக இருந்து நடிகராக மாறிய ஒரு ப்ளே பாய் நடிகர் திருமணமே வேண்டாம். அதெல்லாம் செட் ஆகாது என்று 50 வயதிற்கு மேலாகியும், சிங்கிலாக ஜாலியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். பைக் பிரியர் நடிகரை வைத்து தன்னுடைய முதல் படத்தை இயக்கியிருந்தார் அந்த ப்ளே பாய் நடிகர். அதன் பிறகு தற்போது அரசியலில் குதிக்க தயாராக இருக்கும் ஒரு நடிகரை வைத்து இரண்டாவது படத்தை இயக்கியிருந்தார்.

இரண்டு படமும் செம ஹிட்டானது. பின்னர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஹீரோவாக நடித்தது வேலைக்கு ஆகவில்லை என்றதும், வில்லனாகவும் மிரட்டி வருகிறார். அந்த ப்ளே பாய் நடிகர் கூட நடிக்கும் நடிகைகளை விட்டு வைக்கவே மாட்டார் என்பது சினிமா வட்டாரத்திற்கே தெரிந்த விஷயம் தான். ஆனால் ஒரு ஹீரோயின் மட்டும் அவரிடமிருந்து எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

இதையும் படிங்க - சிம்பு மேல எந்த தப்பும் இல்ல!. எல்லாத்துக்கும் காரணம் அவங்கதான்!.. இது தெரியாம போச்சே!..

அதுவும் ஒருமுறை அல்ல 2 முறை எஸ்கேப் ஆகியுள்ளார். செய்தி வாசிப்பாளராக இருந்து, பின்னர் சீரியலில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வரும் அந்த பிரபல நடிகை இந்த ப்ளே பாய் நடிகருடன் 2 படங்களில் நடித்துள்ளார். விலங்கு பெயரில் முதல் படமும் குழந்தைகள் விளையாடும் பொருளின் பெயரில் இரண்டாவது படமும் வெளியானது. இதற்கு முன்னர் அந்த ப்ளே பாய் நடிகர் கூட நடித்த எந்த ஹீரோயினையும் விட்டுவைத்ததே இல்லை.

அட்ஜெட்மண்ட் செய்தால் தான் அவர் படத்தில் நடிக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இதனால், ஒரு படத்திலிருந்து ஹீரோயின் விலகிய சம்பவம் கூட நடந்துள்ளது. எங்கே திருமணம் செய்துகொண்டால், தன்னுடைய ஜாலியான வாழ்க்கைக்கு மனைவி ஆப்பு வைத்து விடுவாரோ என்ற பயத்தில் தான் அவர் திருமணமே செய்துகொள்ளாமல் உல்லாசமாக வாழ்ந்து வருகிறார்.

அப்படிபட்ட அந்த நடிகர், கதைக்கு அந்த ஹீரோயின் தான் சரியாக இருப்பார் எனவே, அவரிடம் சேட்டை செய்துவிடாதீர்கள் என்று படக்குழு கெஞ்சி கேட்டுக்கொண்டதால், அமைதியாக வாலை சுருட்டி வைத்துவிட்டார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தான் அந்த ஹீரோயின் மட்டும் மிஸ் ஆகி தப்பித்துள்ளார்.

இதையும் படிங்க - ஜெயிலர் டிரெய்லரில் இதெல்லாம் கவனிச்சீங்களா.. குறியீடுகளை வச்சே முழு கதையும் சொல்லிடலாம்!…

Next Story