சின்ன பட்ஜெட் படங்களைத் திரையிட தியேட்டர்கள் கிடைக்காமல் பலரும் திணறி வரும் நிலையை இன்று நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். ஆனால் அப்படிப்பட்ட சூழலில் ஆபத்பாந்தவனாய் அதுபோன்ற சின்ன பட்ஜெட் படங்களையும் திரையிடுவதற்கு என்றே சில தியேட்டர்கள் உள்ளது.
Also read: எனக்கு அது ரொம்ப கூச்சமா இருக்கும்… கெத்து தினேஷ் என்ன சொல்றாருன்னு பாருங்க…
அதிலும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சத்யா தியேட்டரைத் தான் சொல்ல வேண்டும். இங்கு பல சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகும்.
முதல் பொண்டாட்டி
இப்படியும் படம் இருக்குதா? வந்துருக்கா என நமக்கு எண்ணத் தோன்றும். பொதுவாக எம்ஜிஆர், ரஜினி, விஜயகாந்த் படங்கள் தான் இங்கு அதிகமாகத் திரையிடப்படுவதுண்டு. அந்தப் படங்களுக்குத் தான் மவுசு அதிகம் என்கிறார் திரையரங்கு உரிமையாளர் பாலகிருஷ்ணன். சினிமா தான் தனக்கு முதல் பொண்டாட்டி என்கிறார் இவர்.
டிக்கெட் விலை
அந்தவகையில் இந்த தியேட்டரால் இவருக்கு எந்த லாபமும் கிடையாதாம். டிக்கெட் விலை 50 ரூபாய் தான். ஸ்னாக்ஸ் விலை எதை எடுத்தாலும் வெறும் 5 ரூபாய் தானாம். இங்குள்ள மக்கள் பாமரர்கள்.
கூலித்தொழிலாளர்கள் என்பதால் அவர்களின் சந்தோஷத்திற்காகவே தினமும் 2 காட்சிகளைப் போட்டு இன்றும் தியேட்டரை நடத்தி வருகிறார். இந்தத் தியேட்டர் இன்னும் பழமை மாறாமல் அப்படியே உள்ளது. மணல் தரையை சீட்டுகளாக மாற்றி இருக்கிறார்கள்.
டிஜிட்டல் சவுண்டு
அது தவிர டிஜிட்டல் சவுண்டு சிஸ்டமும் உள்ளது. பழைய காலத்து புரொஜக்டர்களும் உள்ளன. காலம் மாறி சினிமாவும் எங்கேயோ போனாலும் இன்னும் பழமையை மறக்காமல் அதே செட்டப்புடன் தனக்கு லாபமே இல்லை என்றாலும் தியேட்டரை நடத்தி வருகிறார் என்றால் அது உண்மையிலேயே ஆச்சரியமான ஒன்றுதான்.
ஒரே டூரிங் டாக்கீஸ்
Also read: கண்ணாடிய திருப்புனா ஆட்டோ ஓடுமா?.. ஞானவேல் ராஜா செய்த வேலை!.. கலாய்க்கும் ஃபேன்ஸ்..
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் தமிழகத்திலேயே உள்ள ஒரே டூரிங் டாக்கீஸ் இதுதான் என்கிறார் இவர். இப்போது எம்ஜிஆர் படம் இங்கு போட்டாலும் திருநெல்வேலியில் இருந்து காரை எடுத்து வந்து படம் பார்த்து விட்டுச் செல்வார்களாம் ரசிகர்கள்.
Pushpa 2:…
Kanguva: பொதுவாக…
நடிகர் தனுஷ்…
எஸ்கே 23…
கங்குவா திரைப்படம்…