திடீர் ஹீரோயினான ஊர்வசியை பழிவாங்கினாரா பாக்கியராஜ்... ஆனா நடந்ததே வேறு!

by Akhilan |   ( Updated:2022-10-25 09:54:07  )
முந்தானை முடிச்சு
X

முந்தானை முடிச்சு

முந்தானை முடிச்சு படத்தில் நடிகை ஊர்வசி திடீரென புக் செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு இயக்குனர் பாக்கியராஜ் கடைசி வரை தன்னை பழி தான் வாங்குகிறாரோ என்றே கவலை இருந்ததாம்.

கே.பாக்கியராஜ் இயக்கி நடித்து வெளியான படம் முந்தானை முடிச்சு. இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ஊர்வசி, தவக்களை ஆகியோர் நடித்திருந்தனர். இது நடிகை ஊர்வசிக்கு அறிமுக திரைப்படம். இப்படம் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. எப்படி என்றால் போடப்பட்ட பட்ஜெட்டினை விட 10 மடங்கு லாபம் பெற்று தந்ததாம்.

பாக்கியராஜ்

பாக்கியராஜ்

இந்த படத்தில் பரிமளம் என்ற கதாபாத்திரத்தில் ஊர்வசி நடித்திருந்தார். முதலில் இந்த கதாபாத்திரத்தின் தேர்விற்கு வந்தவர் அவரின் அக்கா ‘கலாரஞ்சனி’தான். அவரிடம் சில வசனங்களை படிக்க சொன்னாராம் பாக்கியராஜ். ஆனால் அவருக்கு திணறியதாம். உடனே வாண்டடாக வண்டியில் ஏறினாராம் ஊர்வசி.

அவரிடம் இருந்த வசனத்தினை வாங்கி கடகடவென படிக்க முதலில் அவரை திட்டி அனுப்பி விட்டார் பாக்கியராஜ். ஆனால் ஆடிஷனில் எந்த நாயகியும் கிடைக்கவில்லை. இப்போது தான் ஊர்வசி நினைவுக்கு வந்திருக்கிறார். அவரினை வைத்து ‘டெஸ்ட் ஷூட்’ செய்து பார்த்ததில் இயக்குநருக்கு பரம திருப்தி. படப்பிடிப்பில் ஊர்வசியினை அதிகமாக உழைக்க வைத்தாராம் பாக்கியராஜ்.

பாக்கியராஜ்

பாக்கியராஜ்

இரவு ஏழு மணிக்கே தூங்கி விடுபவரை ஒவ்வொரு முறையும் இரவு ஷூட்டிங் நடத்தினாராம். இதனால், தான் செய்த துடுக்குத்தனத்திற்கு தன்னைப் பழிவாங்கவே, பாக்கியராஜ் தன்னை நாயகி ஆக்கி இருப்பதாக எண்ணினாராம் ஊர்வசி. ஆனால் படம் வெளியாகி நாயகியாக பெரிய அந்தஸ்த்தை பிடித்த பிறகே தான் நினைத்தது பெரிய தவறு என உரைத்ததாம் ஊர்வசிக்கு.

Next Story