
Cinema News
ஏய் ஊர்வசி இங்க வாடி.. ஷூட்டிங் ஸ்பாட்டில் அத்துமீறிய ஆர்.ஜே.பாலாஜி.!
ஹிந்தியில் வெளியாகி நல்ல வெற்றி அடைந்த திரைப்படம் பதாய் ஹோ. இந்த திரைப்படம் ஒரு இருபத்தி ஐந்து வயது நிரம்பிய இளைஞனின் அம்மா கர்ப்பமானால், அந்த குடும்பம் என்ன மாதிரியான சிக்கல்களை சமூகத்தில் சந்திக்கும் என்பதை மிகவும் கலகலப்பாகவும் எதார்த்தமாகவும் காட்டிய திரைப்படம் பாதாய் ஹோ.
இதனை தமிழில் ரீமேக் செய்து உள்ளார் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. இந்த படத்தை வலிமை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். ஊர்வசி அம்மாவாகவும் சத்யராஜ் அப்பாவாகவும், அபர்ணா பாலமுரளி ஹீரோயினாகவும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய ஊர்வசி தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக பேசி முடித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘ ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென பாலாஜி, ‘ ஊர்வசி இங்கே வாடி.’ என்று கூப்பிட்டான்’ என்று ஊர்வசி கூற, அருகிலிருந்த ஆர்ஜே பாலாஜி, ‘அது உங்களுக்கு கேட்காது என நினைத்திருந்தேன், கேட்டு விட்டதா’ என்று கலகலப்பாக பேசி சமாளித்து விட்டு சென்றார்.
இதையும் படியுங்களேன் – சிம்புவை நம்பி தான் வீட்டுக்கு போனேன்.! ஆனால், என்னை ஏமாத்திட்டார்.! – சீரியல் நடிகை பகீர்.!
என்ன இருந்தாலும் ஊர்வசி வயதில் மூத்தவர். மூத்த நடிகை வெகு காலமாக சினிமாவில் இருக்கிறார். அவரை கலாய்ப்பததாக கூறி இப்படியா பேசுவது? என்று ஆர்.ஜே.பாலாஜியை பலரும் வசைபாடி வருகின்றனர். ஆனால் இதனை ஊர்வசி பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அவனும் (ஆர்.ஜே.பாலாஜி) தன் வீட்டு பிள்ளை போல, ஒருவன் தான் என நினைத்து அதனை மேடையில் வெளிப்படையாக கூறி சிரித்து மகிழ்ந்து விட்டார்.