நடிகைகளிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்பாரா கவுண்டமணி?!.. காமெடி நடிகை சொல்றத கேளுங்க!..

Published on: June 28, 2023
Actress Vasuki
---Advertisement---

1990களில் தனது அற்புதமான நகைச்சுவை திறன் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்தவர் நடிகர் கவுண்டமணி. இவரும் செந்திலும் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி படங்களாகவும் மக்கள் விரும்பும் படங்களாகவும் இருந்தது.

தமிழ் திரைப்படங்களில் முதன்முதலாக கதாநாயகர்களை கலாய்த்து தள்ளிய முதல் நடிகராக நடிகர் கவுண்டமணி விளங்குகிறார் என்றால் அது மிகையல்ல.

kundamani
kundamani

அந்த வகையில் நடிகர் கவுண்டமணியோடு இணைந்து நடித்தவர் தான் நடிகை வாசுகி. நடிப்பில் மட்டுமல்லாமல் அண்மை காலத்தில் இவர் அரசியலிலும் ஈடுபட்டு வந்தது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.

மேலும் கவுண்டமணியோடு இவர் இணைந்து நடித்த படங்களில் குறிப்பாக பிச்சைக்கார வேடம் அணிந்து நடித்த படம் இவருக்கு மிக நல்ல பெயரை பெற்று தந்ததோடு மக்கள் மத்தியில் மிகச்சிறந்த அறிமுகத்தையும் கொடுத்தது.

இன்னும் எந்த செயலை பார்த்தால் எவராலும் சிரிக்காமல் இருக்க முடியாது அந்த அளவு எதார்த்தமான நடிப்பை இதில் இருவரும் வெளிப்படுத்தி இருப்பார்கள்.

மேலும் நடிகை வாசுகி கவுண்டமணியோடு இணைந்து சின்னத்தாயி, நம்ம ஊரு பூவாத்தா போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Actress Vasuki
Actress Vasuki

இன்று நடிக்கும் நடிகைகள் அனைவரும் தங்கள் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் போது அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் இந்த விஷயத்தை  பகிரங்கமாக கூறிவரும் நிலையில் ஆரம்ப காலத்தில் திரை துறையில் இது போன்ற அவல நிலை இருந்ததா என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்படுவது இயல்புதான்.

அந்த வகையில் அண்மையில் நடிகை வாசுகி அளித்த You Tube பேட்டியில் நடிகை சகிலா கேட்ட கேள்விக்கு மிகச் சிறப்பான முறையில் பதில் அளித்து இருக்கிறார். அந்த கேள்வி என்னவென்றால் நீங்கள் நடிகையாக இருந்த போது யாவரேனும் உங்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்களா என்பது தான்.

இதனை அடுத்து எந்த கேள்விக்கு பதில் கொடுக்கும் வகையில் தான் கவுண்டமணியுடன் நடிக்கும் போது அவர் ஒரு ஜென்டில் மேன் ஆகவே செயல்பட்டார். மேலும் படப்பிடிக்கும் நேரத்தை தவிர மற்ற நேரத்தில் யாருடனும் பேசாத அற்புதமான நண்பர் என்பதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

Brindha

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.