Connect with us
rajendar

Cinema History

ஒருதலை ராகம் ரிலீஸ்!..காத்து வாங்கிய தியேட்டர்கள்.. அதுமட்டும் நடக்கலனா டி.ராஜேந்தரே இல்ல!..

தமிழ் சினிமாவில் தன்னம்பிக்கை சிகரமாக இருப்பவர் டி.ராஜேந்தர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங், கலை, தயாரிப்பு எல்லாவற்றையும் செய்தவர். பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். குறிப்பாக இவர் வசனம் பேசும் ஸ்டைல் ரசிகர்களுக்கு புதிதாக இருந்ததோடு பிடித்தும் இருந்தது. குறிப்பாக இவர் பேசும் அடுக்குமொழி வசனத்திற்கு ரசிகர்களே உருவானார்கள். அதனால்தான், டி.ஆர் இயக்கி நடிக்கும் படங்களின் கதை, வசனம் கூட கேசட்டாக வெளிவந்து விற்பனையில் சக்கை போடு போட்டது. அதேபோல், இளையரஜாவின் இசைக்கு இணையாக டி.ஆரின் பாடல் கேசட்டுகளும் அந்த அளவுக்கு விற்பனை ஆகியது.

தேசிங்கு ராஜேந்தர் என்பது என்பதுதான் அவரின் முழுபெயர். மயிலாடுதுறையை சேர்ந்தவர். கல்லூரியில் படிக்கும்போது கவிதை எழுவது, பாடல் எழுதுவது இசையமைப்பது என தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார். கதை எழுதும் திறமையும் இருந்தது. இவர் இயக்கிய முதல் திரைப்படம் ஒருதலை ராகம். கல்லூரி மாணவர் ஒருவரின் ஒருதலைக் காதலை காட்டி ரசிகர்களை உருக வைத்தார். 60 கிட்ஸ்களின் கல்லூரி வாழ்க்கை அழகாக திரைக்கதை அமைத்திருப்பார்.

இந்த திரைப்படம் 1980ம் ஆண்டு வெளியானது. இந்த படம் வெளியாகி சில நாட்கள் தியேட்டரில் கூட்டமே இல்லை. எனவே, இன்னும் இரண்டு நாட்கள் இப்படம் ஓடினாலே பெரிய விஷயம் என இப்படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் நினைத்தார்களாம். இப்போது படம் சரியில்லை எனில் ஒரே வாரத்தில் தியேட்டர்களில் இருந்து தூக்குவது போல் அப்போது செய்யமாட்டார்கள். அவர்கள் அப்படி நினைத்த ஒரு வாரத்தில் படம் பிக்கப் ஆகி மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. இப்படத்தில் இடம் பெற்ற வாசமில்லா மலரிது, கூடையில கருவாடு ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த பாடல்கள் மூலம்தான் இந்த படத்திற்கு ரசிகர்களும் வர துவங்கினார்கள்.

அன்று மட்டும் இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்காமல் போயிருந்தார். டி.ராஜேந்தர் என்பவரே ரசிகர்களுக்கு தெரியாமல் போயிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top