Categories: latest news

பொண்டாட்டிக்காக ஒரே ஒரு பளார்.! மொத்த ஆஸ்கர் பதவியும் குளோஸ்.!

உலக சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருதுகளில் முக்கியமானது ஆஸ்கர். இந்த விருதை பெறதான் பல்வேறு திரை கலைஞர்களும் போட்டிபோட்டு வருகின்றனர்.  அதில் சிறந்தவர்களை ஒரு ஆஸ்கர் குழு தேர்வு செய்து விருது வழங்கி கவுரவிக்கும்.

அப்படி, கடந்த ஆண்டு வெளியான கிங் ரிச்சர்ட் எனும் படத்தில் நடித்த வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை தட்டி சென்றார். அந்த புகழ் கொஞ்ச நேரம் தான் அவருக்கு நீடித்தது. அதற்குள், ஒருவரை பளார் என மேடையில் அறைந்து சர்ச்சையில் சிக்கினார்.

அதாவது கிருஷ் ராக் எனும் நடிகர் மேடையில், வில் ஸ்மித் மனைவியை பற்றி கிண்டலாக பேசினார். இதில் கோபமான ஸ்மித், உடனே ஆஸ்கர் மேடை என்று கூட பாராமல், நேராக மேடையேறி அவரை பளார் என மறைந்துவிட்டார்.

இது பயங்கர சர்ச்சையானது. கிட்டத்தட்ட உலகம் முழுக்க தலைப்பு செய்தியாக மாறும் அளவுக்கு பிரபலமானது. இதற்கு மேடையில் மன்னிப்பு கோரினார் வில் ஸ்மித். மேடையில் ஒருவரை அறைந்ததற்காக ஆஸ்கர் கமிட்டி கூட அவர் மீது விசாரணை வைத்தது. அதற்க்கு விளக்கம் இவர் அளித்தார்.

இதையும் படியுங்களேன் – கமலுக்கு போட்ட ஸ்கெட்ச்.! மாட்டிக்கொண்டு முழிக்கும் விஜய் சேதுபதி.!

தற்போது இந்த சர்ச்சைகளை தொடர்ந்து, இவர் தனது ஆஸ்கர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது இவர் ஆஸ்கர் தேர்வுக்குழு கமிட்டியில் உறுப்பினராக இருந்தார். அந்த பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளாராம் வில் ஸ்மித். இவரது ராஜினாமாவை ஆஸ்கர் குழு ஏற்றுள்ளது.

Published by
Manikandan