More
Categories: Cinema History Cinema News latest news

ஆஸ்கார் விருதுக்கு சென்ற தமிழ் படங்கள்… ஹிட் லிஸ்டில் இந்த படமும் இருக்கா?

தமிழ் சினிமாவின் தற்போது மெருகேறி இருக்கிறது. ஆனால், 90ஸ்களில் கூட தமிழ் சினிமா தனக்கென சில பிரம்மாண்ட வெற்றிகளை பெற்று வந்தது. அதற்காக ஆஸ்காருக்கு கூட பரிந்துரைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன. சமீபத்தில் சூரரைப் போற்று திரைப்படம் சிறந்த நடிகை, சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படம் என்ற மூன்று விருதுகளுக்கு ஆஸ்கார் பட்டியலில் நாமினேட் செய்யப்பட்டு இருந்தது. விருதுகள் கிடைக்கவில்லை என்றாலும் அதுவே கோலிவுட்டிற்கு கௌரவம் தான். ஆனால் இதற்கு முன்னரே சில தமிழ் படங்கள் நாமினேஷன் வரை சென்றுள்ளது.


தெய்வ மகன்: 1969ம் ஆண்டு வெளிவந்த படம். இப்படம் சிவாஜி கணேசன் நடிப்பில் உருவாகி இருந்தது. இரு மகன் மற்றும் தந்தை என மூன்று கதாபாத்திரங்களை சிவாஜி ஏற்று நடித்திருந்தார். சிதைந்த முகத்துடன் அவர் நடித்திருந்த இத்திரைப்படம் தான் தமிழில் இருந்து ஆஸ்காருக்கு சென்ற முதல் திரைப்படம்.

Advertising
Advertising

நாயகன்: கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் நாயகன். 1988ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இப்படம் கேங்ஸ்ட்டருக்கு வேறு மாதிரியான பிம்பத்தினை உருவாக்கியது. சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பட்டியலில் நாயகன் போட்டி போட்டது.

அஞ்சலி:

ஷாமிலி நடிப்பில் வெளியான படம். மணிரத்னம் இயக்கத்தில் முழுக்க முழுக்க குழந்தைகளை வைத்து இயக்கப்பட படம். தேசிய விருதுகளை குவித்த இப்படமும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

தேவர்மகன்:

பரதன் இயக்கத்தில் சாதியை மையமாக வைத்து உருவான படம். கமல்ஹாசன் மற்றும் சிவாஜி கணேசன் போட்டி போட்டு நடித்த இப்படம் இன்றுமே எவர்க்ரீனாக தான் இருக்கிறது. இப்படம் 1992ம் ஆண்டு ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது. தேசிய விருதுடன் ஆஸ்கார் போட்டியிலும் நடைப்போட்டது. இதுமட்டுமல்லாமல், ஹேராம், இந்தியன் மற்றும் குருதிப்புனல் படங்களும் ஆஸ்கார் போட்டியில் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான நாமினேஷன் பட்டியலில் இருந்தன.

இதையும் படிங்க: சிவாஜியை தேசிய விருது வாங்க விடாமல் தடுத்த கமல்ஹாசன்.! பின்னணியில் இருந்த தரமான சம்பவம்.!

ஜீன்ஸ்:

பிரசாந்த் இருவேடத்தில் நடித்த ஜூன்ஸ் படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது. பிரசாந்த், நாசர் என இப்படத்தின் இரு வேடங்களின் எண்ணிக்கை அதிகம். ஜீன்ஸ் படத்தின் ஒரு பாடல் உலக அதிசயத்திற்கு முன்னர் எடுக்கப்பட்டிருந்தது. இதற்காக ஷங்கர் இயக்கத்தில் ஆஸ்காருக்கு நாமினேட் செய்யப்பட்ட இரண்டு திரைப்படங்களில் ஜீன்ஸ் படமும் சேரும்.

Published by
Akhilan

Recent Posts