இதெல்லாம் கீரவாணி இசையமைத்த பாடல்களா?.. தமிழிலும் முத்திரை பதித்த ஆஸ்கார் நாயகன்..
ஆர்.ஆர்.ஆர் படத்தின் பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்திருப்பது தெலுங்கு சினிமாவிற்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிற்கே பெருமை தரக்கூடிய விஷயமாகவே கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக முதன் முதலில் இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருது பெற்ற கலைஞர் ஏ.ஆர்.ரஹ்மானாக இருந்தார்.
அதன் பிறகு அதே துறையில் இப்பொழுது மீண்டும் ஒரு ஆஸ்கார் என நினைக்கும் போது இந்திய சினிமாவே மார்தட்டிக் கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது. அந்த விருதுக்கு சொந்தக்காரராக இருப்பவர் கீரவாணி. இசைக்கு மட்டுமில்லாமல் அந்த பாடலை எழுதிய பாடலாசிரியரான சந்திரபோஸுக்கும் அந்த விருது கிடைத்துள்ளது.
பொதுவாகவே இசையமைப்பாளர் என்றால் ஒரு வித ராப்பாக ரகடா இருப்பார்கள் என்று தான் ஒரு பிம்பம் இருக்கின்றது. உதாரணமாக அனிருத், தேவி ஸ்ரீபிரசாத், தமன், போன்றவர்கள் பார்ப்பதற்கே அந்த துறு துறு போக்கில் எப்போதுமே இருப்பார்கள். ஆனால் ஆர்.ஆர்.ஆர் படத்தின் இசையமைப்பாளரான கீரவாணியை பார்க்கும் போது இவரும் இசையமைப்பாளரா? என்று கேட்க கூடிய அளவிற்கு மிகவும் சாதுவாக குறிப்பாக சொல்லப்போனால் வாழ்க்கையில் பல அடிகளை பட்ட ஒரு இயக்குனர் மாதிரி இருப்பார்.
ஆனால் அவர் தான் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய டிரெண்டிங்கான நபராக வலம் வருகிறார். சரி இவரின் ஆரம்ப கால நிகழ்வுகளை பார்த்தால் அட இந்த மனுஷன் தமிழிலயும் தலை காட்டியிருக்கிறாரே என்று ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். ஆம், மரகதமணி என்ற பெயரில் ஒரு சில தமிழ் படங்களில் இசையமைத்திருக்கிறார்.
90களில் வெளிவந்த கொண்டாட்டம், பிரதாப் போன்ற அர்ஜூன் படங்களுக்கு இவர் தான் இசையமைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நண்பர்கள் கொண்டாடிய ‘வானமே எல்லை’ படத்திற்கும் கீரவாணி என்கிற மரகதமணி தான் இசையமைத்திருக்கிறார். வானமே எல்லை படத்தின் அனைத்துப் பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்.