இதெல்லாம் ஒரு குறையா.?! ஆஸ்கரை தட்டி தூக்கிய மாற்றுத்திறனாளி.!

சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் யாருக்கு, எந்த படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது என ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.
அதில் தங்கள் ஆதர்சன நாயகன் பெயர் வந்துள்ளதா என பார்த்து வருகின்றனர். அதில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. நடிப்புக்கு மொழி தேவையில்லை என கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நடிப்பதற்கு உடலில் உள்ள குறை ஒரு தடையே இல்லை என ஒருவர் நிரூபித்து உள்ளார்.
இதையும் படியுங்களேன் - வேலையை காட்ட தொடங்கிய பாலா.! உச்சகட்ட அச்சத்தில் சூர்யா ரசிகர்கள்.!
டிராய் கொட்சூர் (Troy Kotsur) எனும் நடிகர் ஓர் மாற்று திறனாளி. அவருக்கு காதுகள் கேட்கும் திறன் இல்லை. ஆனாலும் தனது சிறப்பான நடிப்பாற்றலால், கோடா (CODA ) எனும் படத்தில் நடித்து சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை தட்டி சென்றுள்ளார்.
இவர் அந்த விருதை பெற்றுவிட்டு இந்த விருதினை காது கேளாதோர் மக்களுக்காக சமரிப்பிக்கிறேன் என நெகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். உடலில் உள்ள குறையெல்லாம் ஒரு தடையே இல்லை என்பதை இவர் நிரூபித்துள்ளார்.