அமரன், லக்கி பாஸ்கர் படங்களின்... OTT ரிலீஸ் எப்போன்னு பாருங்க!
தீபாவளிக்கு ஜெயம் ரவி நடிப்பில் 'பிரதர்', சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அமரன்', கவின் நடிப்பில் 'பிளடி பெக்கர்' மற்றும் துல்கர் சல்மான் நடிப்பில் 'லக்கி பாஸ்கர்' படங்கள் வெளியாகின.
இதில் அமரன் வாழ்க்கை வரலாற்று படம் என்றாலும் கூட கலெக்ஷனில் குறை வைக்கவில்லை. எமோஷனல் காட்சிகளால் ரசிகர்களை ஈர்த்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயம் ரவியின் 'பிரதர்' அரைத்த மாவையே அரைத்து ரசிகர்களை கவர தவறிவிட்டது.
கவினின் 'பிளடி பெக்கர்' கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. பாக்ஸ் ஆபிசில் தப்பிக்குமா? என்பது தெரியவில்லை. எதிர்பாராமல் வந்த 'லக்கி பாஸ்கர்' தமிழ், தெலுங்கில் ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆதரவையும் பெற்று பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பி வருகிறது. தற்போது 'லக்கி பாஸ்கர்' படத்திற்கு திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் 'அமரன்' மற்றும் 'லக்கி பாஸ்கர்' படங்களின் ஓடிடி குறித்த புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி டிசம்பர் முதல் வாரத்தில் இரண்டு படங்களும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியினை நெட்பிளிக்ஸ் தளம் வெளியிடும் என தெரிகிறது.
துல்கரின் 'லக்கி பாஸ்கர்' இதுவரை உலகம் முழுவதும் ரூபாய் 40 கோடியை வசூலித்து இருக்கிறது. சிவகார்த்திகேயன்-சாய் பல்லவியின் 'அமரன்' திரைப்படம் ரூபாய் 62 கோடியை உலகம் முழுவதும் ஈட்டி பாக்ஸ் ஆபிசில் தடம் பதித்து வருகிறது.