OTT: கோலிவுட்டின் சில தரமான Low Budget த்ரில்லர் படங்கள்… பிரைம் ஓடிடியின் சூப்பர் லிஸ்ட்…

#image_title
OTT: தமிழ் சினிமாவில் சின்ன தொகையில் எடுத்தும் திரில்லர் ஜானரில் வெளியாகிய திரைப்படங்களின் சூப்பர் லிஸ்ட் தொகுப்புகள்.
2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் வெள்ளை பூக்கள். காவல்துறை அதிகாரியான விவேக் ரிட்டயர்டு ஆன பின்னர் மகனை பார்க்க வெளிநாடு செல்கிறார். அங்கு நடக்கும் பிரச்னைக்கு இவர் செய்யும் விசாரணை எப்படி இருக்கிறது என்பதுதான் கதை.
காமெடியில் கலக்கிய விவேக்கின் குணசித்திர வேடம் என்பதால் ஆச்சரியப்பட வைத்தார். தற்போது பிரைம் ஓடிடியில் இப்படம் இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான படம் பிளாக். இப்படம் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியானது.
இரண்டே கேரக்டரில் மொத்த படமும் எங்குமே போர் அடிக்கவில்லை. விறுவிறுப்பான கதையாக அமைக்கப்பட்டு இருந்ததால் சூப்பர் திரில்லராக அமைந்துள்ளது. இப்படமும் அமேசான் பிரைம் ஓடிடியில் இடம்பெற்றுள்ளது. கலையரசன் மற்றும் தன்ஷிகா நடிப்பில் உருவான திரைப்படம் உரு.

பிரபல எழுத்தாளரான ஜீவன், தனது கதைகள் சரியாக ஹிட்டடிக்காமல் போகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். த்ரில்லர் கதையை எழுதுவதற்காக, அவர் ஒரு இடத்திற்கு செல்ல அங்கு எதிர்பாராத விதமாக நடக்கும் திரில்லர் சம்பவங்கள் தான் படம்.
நடிகர் வெற்றி நடிப்பில் உருவான திரைப்படம் ஜீவி. செயின் அறுப்பில் ஈடுபடும் ஹீரோ தொடர்ந்து சந்திக்கும் நிறைய பிரச்னைகளை திரில்லர் மோடில் சொல்லி இருக்கும் திரைப்படம். சின்ன பட்ஜெட் என்றாலும் படம் பலரிடமும் சூப்பர்ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.
பாபி சிம்ஹா, காஷ்மீர் பர்தேசி நடிப்பில் வெளியான படம் வசந்த முல்லை. பணத்திற்காக அயராது உழைக்கும் ருத்ரன், தனது காதலி நிலாவுடன் ஒரு காதல் பயணத்தைத் தொடங்குகிறார். வழியில், அவர் வசந்த முல்லை என்ற மோட்டலில் தங்குகிறார். அங்கு நடக்கும் திரில்லர் கதை தான் மொத்த படமும்.