Dragon: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான டிராகன் திரைப்படத்தின் ஓடிடி அப்டேட் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குனராக வெற்றிக்கண்ட பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் டூடே சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து டிராகன் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வந்தார் பிரதீப் ரங்கநாதன். ஆரம்பத்தில் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை.
இப்படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏற்கனவே சூப்பர் வெற்றி படமான ஓ மை கடவுளே படத்தினை இயக்கி இருந்தார். ஆனால் இருவரும் டிராகன் படத்தின் புரோமோஷனில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்தனர்.
அதை தொடர்ந்து படம் வெளியாகி முதல் காட்சியில் இருந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ச்சியாக ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. பல வாரங்களை கடந்து 100 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை படைத்துள்ளது டிராகன் திரைப்படம்.
இதனால் தற்போது ஏஜிஎஸ் தயாரிப்பில் மீண்டும் அஸ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் மீண்டும் இணைய இருக்கின்றனர். இந்நிலையில் தியேட்டர் ஓகே எப்போ ஓடிடிக்கு வரும் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்போது அதன் அப்டேட்டும் வந்துள்ளது.
வரும் மார்ச் 21ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கிறது டிராகன் திரைப்படம். ஆனால் தியேட்டரில் ஹிட்டடித்த சமீபத்திய திரைப்படங்கள் ஓடிடியில் அடி வாங்கும் நிலையில் டிராகன் படம் என்ன நிலை ஆகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சியான் விக்ரமின்…
டார்க் ஹியூமர்,…
Coolie: திரைப்பட…
ரியோ ராஜ்…
Sivakarthikeyan: சென்னை…