Lal salaam: ரஜினிகாந்த் நடிப்பில் அவர் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்த லால் சலாம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய கோடிகளில் வியாபாரம் ஆகும். ஆனால் அவர் மகளுக்காக கேமியோ செய்த லால் சலாம் படம் இதில் அப்பாற்பட்டதாக இருக்கிறது.
3 படத்தினை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து ரி-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் வசூலில் சக்கை போடு போட்டு ஆச்சரியப்படுத்தியது.
இந்த நம்பிக்கையில் மீண்டும் ஒரு படத்தினை இயக்க வந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். லால் சலாம் என்ற பெயரில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் ஹீரோவாக நடித்த இப்படம் முதலில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட என்னுடைய அப்பாவை எல்லாரும் சங்கி என அழைக்க வேண்டாம் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசி இருந்தார். இதனால் படத்திற்கு ரசிகர்களிடம் முதலில் ஆதரவு இருந்தது.
ஆனால், படம் ரிலீஸாகி வசூலில் மட்டுமல்லாமல் வரவேற்பு கூட அடி வாங்கியது. இதை தொடர்ந்து ஒரு பேட்டியில் முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் தொலைந்து விட்டதால் இப்படத்தின் எடிட்டிங் சரியாக வரவில்லை என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசி இருந்தார். இது இப்படத்தின் ஓடிடி வெளியீட்டுக்கும் வேட்டு வைத்தது.
பல நிறுவனங்கள் அந்த ஹார்ட் டிஸ்கை எடுத்து வர கூறியதால் பல மாதங்களாக ஓடிடிக்கு வராமல் இருந்தது. இந்நிலையில் வரும் ஜூன் 6ந் தேதி இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்ட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…