OTT: தமிழ் சினிமாவில் சயின்ஸ் பிக்ஷன் ஜானரை எடுத்து ஹிட்டடித்த படங்கள்… லிஸ்ட்ட நீங்க மிஸ் செய்ய கூடாதுப்பா!

#image_title
OTT: சயின்ஸ் பிக்சன் என்றாலே ஹாலிவுட் தான் என்ற நிலை தற்போது இல்லை. தமிழ் சினிமாவில் இதுவரை இந்த சேனல் குறைந்த அளவில்தான் கையாளப்பட்டாலும், எல்லா படங்களும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்று இருக்கிறது. அதன் பிரத்தியேக தொகுப்புகள் இதோ!
சூர்யா, சமந்தா, நித்யா மேனன் நடிப்பில் வெளியான திரைப்படம் 24. ஹீரோவும் நானே வில்லனும் நானே என சூர்யா களமிறங்கி கலக்கிய திரைப்படத்தின் வில்லன் ஆத்ரேயாவை இன்றளவும் பலரால் மறக்கவே முடியாது. ஒரு வாட்ச்சை வைத்துக்கொண்டு டைம் ட்ராவல் செய்து அசத்தி சூப்பர்ஹிட் ஆனது.
பிரைம் ஓடிடியில் இப்படம் இடம்பெற்றுள்ளது. விஷ்ணு விஷால் மற்றும் கருணாகரன் நடிப்பில் வெளியான திரைப்படம் இன்று நேற்று நாளை. இன்றளவும் கோலிவுட்டில் டைம் டிராவல் ஜுனரின் வெளியான படங்களில் நம்பர் ஒன் இடம் கண்டிப்பாக இப்படத்திற்கு தான் கொடுக்கப்படும். சின்ன பட்ஜெட்டில் இப்படம் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இப்படமும் அமேசான் பிரைம் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. முதலில் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படி ஒரு படத்தை கொடுக்க முடியுமா என்ற விஷயமே ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் படம் பட்டி தொட்டி எங்கும் பாப்புலர் ஹிட்.
இப்படி ஒரு கதையில் ஒரு போனை வைத்துக்கொண்டு டைம் டிராவல் செய்ததெல்லாம் ஆச்சரியத்தின் உச்சகட்டம். அதிலும் இப்படத்தில் சயின்டிஸ்ட் ஆக செல்வராகவன் தன்னுடைய சூப்பர் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இப்படமும் அமேசான் பிரைம் ஓடிடியில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் டிக்கிலோனா. காமெடி படம் தான் என்றாலும் சயின்ஸ் பிக்ஷனை தரமாக சொல்லி ஆச்சரியப்படுத்தியது. இருந்தும் மற்ற படங்களை விட இப்படத்தில் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால் குறிப்பிட்ட நேரத்தில் டைம் ட்ராவல் செய்யும் ஆல். அதே இடத்தில் இருப்பார். இதனால் ஒரே நேரத்தில் ஒரே ஆள் இரண்டாக இருந்து காமெடி சரவெடியாக படம் அமைந்தது.
டிக்கிலோனா திரைப்படம் ஜீ5 தமிழ் ஓடிடியில் இடம்பெற்றுள்ளது. தெலுங்கில் வெளியாகி தமிழில் டப் செய்யப்பட்ட திரைப்படம் பிளிங்க். ஒருமுறை இப்படத்தை பார்த்தால் கண்டிப்பாக புரியாது. இரண்டு முறை படத்தை பார்க்கும் போது இப்படியும் ஒரு கதையா என ஆச்சரியப்பட வைக்கும். ஒவ்வொரு காட்சியையும் இன்னொரு காட்சியுடன் இணைத்து இருக்கும் ரகம் இயக்குனர் தன்னுடைய டைரக்ஷனில் ஆப் லாஸ் வாங்கி இருக்கிறார். பிரைமில் இருக்கிறது.