Categories: latest news OTT

OTT: சயின்ஸ் பிக்‌ஷனில் காமெடி வேணுமா? படக்கலம் படத்தின் திரைவிமர்சனம்…

OTT: வித்தியாசமான கதையை கையில் எடுத்து அதில் வெற்றியும் கண்டு மீண்டும் நிரூபித்து இருக்கிறது மலையாள சினிமா. அந்த வகையில் தற்போது ஹாட்ஸ்டாருக்கு வந்திருக்கும் படக்கலம் படத்தின் பாசிட்டிவ், மைனஸ் பேசும் திரைவிமர்சனம் இங்கே.

ஒரு பிரபல இன்ஜினியரிங் கல்லூரியின் ஹெச்ஓடி பதவிக்கு இரண்டு பேராசிரியர்களான ஷாஜி (சுராஜ்) மற்றும் ரஞ்சித் (ஷரஃப்) போட்டியிடுகின்றனர். அப்போ திடீரென மேஜிக்கல் பச்சிசி போர்ட்டால் ஒருவர் ஆன்மா கூடு விட்டு கூடு பாய்கிறது.

போட்டியில் வென்று சுராஜ் ஹெச்ஓடியாக மாறிவிட அந்த இடத்துக்கு வருகிறார் ஷரஃப். இது ஒரு அசம்பாவிதமான அனுபவமாக மாறி, நிறைய கலவரமான விஷயங்களை உருவாக்கி விடுகிறது. இதனால் மாணவனாக இருக்கும் ஜிதின் மற்றும் அவரது நண்பர்கள் இந்த சூழலை சரி செய்ய போராடுகிறார்கள். கடைசியில் என்ன நடந்தது என்பதுதான் கதை.

இது மலையாளத்துக்கு வேண்டும் என்றால் ஓகே தமிழுக்கு ரொம்ப பழைய கதைதான். பிரபு நடித்த சின்ன வாத்தியார் படம் போல கூடு விட்டு கூடு பாயும் கதை என்றாலும் அக்மார்க் காமெடிகளால் நம்மை சிரிக்க வைப்பதற்கு தவறவில்லை.

காமெடி என்றாலும் பல இடங்களில் லாஜிக் மிஸ்ஸாகி கடுப்பேற்றாமல் போர் அடிக்காம எடுத்து சென்றுள்ளனர். இடைவேளை அருமையாக இருந்துள்ளது. முதல் பகுதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லாமல் கொஞ்சம் பொறுமையாக செல்வது போல இருக்கிறது.

கதையின் முக்கியமான அம்சமான பச்சிசி போர்ட் குறித்து இன்னும் தெளிவாக புரிவது போல அமைக்கப்பட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். அந்த லாஜிக் தவறுகளை தவிர்த்து இருந்தால் படம் பக்கா ஹிட் லிஸ்ட் என்பதில் சந்தேகமே இல்லை.

தற்போது ஆவரேஜ் படம் என்றாலும் தமிழ் டப்பிங் இருப்பதால் ஹாட்ஸ்டாரில் வீக் எண்டுக்கு சரியான டைம் பாஸாக இருக்கும். சுராஜின் நடிப்புக்காகவே இந்த படத்தினை ஒன்ஸ்மோர் கேட்பதிலும் தவறில்லை.

Published by
ராம் சுதன்