OTT: இந்தமுறை சூப்பர்ஸ்டாரா? சமந்தாவா? ஓடிடியின் இந்த வார பக்கா லிஸ்ட்..
OTT: ஓடிடிகளில் இந்த வார வெளியாக இருக்கும் முக்கிய படங்கள் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.
டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையன். ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். முதல்முறையாக ரஜினி கதைக்காக நடித்துள்ளார்.
இத்திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் நவம்பர் 8ந் தேதி ரிலீஸாக இருக்கிறது. ஜிதின் லால் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் ரிலீஸான திரைப்படம் ஏ.ஆர்.எம்.
இத்திரைப்படம் பல மொழிகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை குவித்த இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நவம்பர் 8ந் தேதி ரிலீஸாகியது.
நடிகர் வருண் தவான் மற்றும் சமந்தா இருவரின் நடிப்பில் உருவாகி இருக்கும் வெப் சீரிஸ் சிட்டாடெல் ஹனி பெனி. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவரும் இத்தொடர் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நவம்பர் 7ந் தேதி அமேசான் பிரைமில் வெளிவந்தது.
ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தேவாரா. இப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி கலவையான விமர்சனங்களையே குவித்தது. இப்படம் நவம்பர் 8ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.