Connect with us
banner

வலிமையை வட்டமிடும் ott தளங்கள்… ஒப்புக்கொண்டாரா போனி கபூர் ?

Cinema News

வலிமையை வட்டமிடும் ott தளங்கள்… ஒப்புக்கொண்டாரா போனி கபூர் ?

ஓமிக்ரான் பரவல் காரணமாக வலிமை திரைப்படத்தின் தேதி தள்ளி போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்து ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.

போனி கபூர் தயாரிப்பில், அஜித் மீண்டும் இயக்குனர் வினோத்துடன் கைகோர்த்திருக்கும் திரைப்படம் தான் வலிமை. இத்திரைப்படத்திற்காக ரசிகர்கள் வெறி கொண்டு காத்திருக்கின்றனர். மும்மொழிகளில் அஜித்தின் வலிமையை அனுபவிக்கவும் எனவும் உலகளவில் வலிமை திரைப்படம் ஜனவரி மாதம் 13 ஆம் திரையிடப்படவுள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் போனி கபூர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஓமிக்ரான் பரவல் காரணமாக ஜனவரி 10 ஆம் தேதிக்கு பிறகு நிலைமை மாறலாம் எனவும், கட்டுப்பாடுகள் கடுமை படுத்த படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது. ஒருவேளை இம்முறையும் திரைப்படம் ரீலீஸ் ஆகாதோ என ரசிகர்கள் ஒரு பக்கம் அச்சத்தில் இருக்க, இது தான் டா சான்ஸ் என போனி கபூரிடம் சில ott தளங்கள் டீலிங் பேசி வருகிறார்களாம்.

தயாரிப்பாளர் போனி கபூரே சற்று குழப்பத்தில் தான் உள்ளார் எனவும், இருந்தாலும் ott யில் வெளியிட மாட்டார் எனவும் நெருங்கிய வட்டத்தில் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், மாஸ்டர் திரைப்படம் தயாரிப்பாளர் போல, நீங்களும் தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top