“இனி எந்த படமும் ரிலீஸ் கிடையாது”… உஷார் ஆகும் ஓடிடி நிறுவனங்கள்… என்ன காரணம் தெரியுமா?

Direct OTT films
கொரோனா காலத்திற்கு முன்பு திரையரங்குகளில் வெளியிடமுடியாத திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. மேலும் பல திரைப்படங்கள் திரைக்கு வந்து சில வாரங்கள் ஆன பிறகு ஓடிடியில் வெளிவந்தது.

Soorarai Pottru
ஆனால் கொரோனா லாக் டவுனில் நிலைமை அப்படியே தலைகீழாக ஆனது. அதாவது ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் பல திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் சோகத்தில் மூழ்கினர். மேலும் கொரோனா ஊரடங்கில் பல திரையரங்குகள் இடிக்கப்பட்டன.
எனினும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டப் பிறகு திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டன. கொரோனாவால் முடங்கிப்போன பல திரைப்படங்கள் தளர்வுகளுக்குப் பின் திரையரங்குகளில் வெளியாகி வந்தன. இந்த நிலையில் தற்போது ஓடிடி நிறுவனங்கள் ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை நம்பி “லவ் டூடே” படத்தை புறக்கணித்த சத்யராஜ்… ஆனா இப்போ என்ன ஆச்சுன்னா??

Sarpatta Parambarai
அதாவது இனி வரும் காலங்களில் ஓடிடி நிறுவனங்கள் தங்களது ஓடிடி தளங்களில் நேரடியாக திரைப்படங்கள் வெளியிடுவதை நிறுத்தப்போகிறதாம். இனி கொரோனாவுக்கு முந்தைய காலம் போல, திரையரங்கிற்கு வந்த பிறகுதான் ஓடிடியில் திரைப்படங்களை வெளியிட முடிவு செய்துள்ளதாம்.

Atrangi Re
சில திரைப்படங்கள் ஓடிடி நிறுவனதால் பெரிய விலைக்கு வாங்கப்பட்டுவிடுகிறது. ஆனால் அத்திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்காமல் போய்விடுகிறதாம். இதனால் ஓடிடி நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறதாம். ஆதலால் இனி வரும் காலங்களில் நேரடியாக ஓடிடியில் வெளிவரும் திரைப்படங்களை ஓடிடி தளங்கள் நிறுத்தப்பபோகிறதாம். இத்தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தனது வீடியோவில் பகிர்ந்துள்ளார்.