OTT: எம்புரான் முதல் விடிஎஸ் வரை… இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் பக்கா ஸ்கெட்ச்சா இருக்கா?

by Akhilan |
OTT: எம்புரான் முதல் விடிஎஸ் வரை… இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் பக்கா ஸ்கெட்ச்சா இருக்கா?
X

OTT

OTT: தமிழ் சினிமாவில் இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கும் திரைப்படங்கள் குறித்த தொகுப்புகள்.

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து கடந்த மாதம் வெளியான திரைப்படம் எம்புரான். லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகி இருக்கும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.

விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் நடிப்பில் பரபரப்புடன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் வீர தீர சூரன். இப்படத்தின் இரண்டாம் பாகமாக முதலில் வெளியான வரவேற்பு பெற்ற படம் பிரைம் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.

தெலுங்கில் சூப்பர் திரைப்படமான மேட் ஸ்கொயர் சூப்பர்ஹிட் அடித்தது. நிதின், சங்கீத் சோபன், ராம் நிதின் மற்றும் பிரியங்கா ஜவால்கர் ஆகியோர் நடித்துள்ள இப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கிறது.

அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவான திரைப்படம் தருணம். இப்படம் டெண்ட்கொட்டா ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.

பிரிட்டோ ஜேபி இயக்கத்தில் பாரதிராஜா, ரியோராஜ், நட்டி, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் நிறம் மாறும் உலகில் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.

Next Story