More
Categories: Cinema News latest news

ஒத்த ஆளா களமிறங்கிறதுல தலைவர் கில்லி தான்… இந்த வார தமிழ் ஓடிடி ரிலீஸ்…

OTT Release: தமிழ்சினிமா ரசிகர்கள் இப்போதெல்லாம் தியேட்டர் ரிலீசை விட ஓடிடி ரிலீஸுக்கு தான் ஆவலாக காத்திருக்கின்றனர்.  அந்த வகையில் இந்த வார ஓடிடியில் ரசிகர்களுக்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

சமீப காலங்களாகவே ரசிகர்கள் தியேட்டரில் படம் பார்க்கும் பழக்கத்தை விட ஓடிடியில் படம் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாகவே கூற வேண்டும். ஒவ்வொருவரும் புதுப்பட ரிலீசாக காத்திருக்கும் நிலை உருவாகி வருகிறது. இதற்காகவே ஓடிடிக்கென தனி படங்களும் எடுக்கும் நிலை உருவாகிவிட்டது.

Advertising
Advertising

இதையும் படிங்க: ரஜினி பட வசூலை வைத்து எடுத்த அஜித்தின் சூப்பர் ஹிட் படம்!.. சூப்பர்ஸ்டார்னா சும்மாவா?!…

அந்த வகையில் இந்த வார ஓடிடியில் விஷால் நடிப்பில் உருவான ரத்னம் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.  இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியிருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்திருந்தார். பிரியா பவானி சங்கருக்கு முழுக்க முழுக்க முக்கிய வேடம் கொடுத்தது இப்படம் தான்.

யோகி பாபு, கௌதம் மேனன்,  சமுத்திரக்கனி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். கடந்த மாதம் திரைக்கு வந்த படம் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை என்றாலும் நல்ல வரவேற்பை பெற்றது குற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படம் இன்று பிரைம் ஓடிடியில் ரிலீசாகி இருக்கிறது.

இதையும் படிங்க: எம்.ஆர்.ராதாவுக்கு விக் வைக்கிறது உலக மகா சாதனை… 52 தடவை ஜெயிலுக்குப் போன நடிகவேள்!

Published by
Akhilan

Recent Posts