அட இந்த வாரம் ஜம்முனு என்ஜாய் பண்ணலாம் போலயே… ஓடிடியில் களைக்கட்டும் தமிழ் வெப்சீரிஸ்கள்…

OTT: தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை ஒரு பக்கம் நிறைய வளர்ந்து கொண்டே இருப்பதால் அவர்களுக்கு சமீபத்திய காலமாக வெப்சீரிஸ்கள் தான் தீனிப்போட்டு கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் தமிழுக்கென பிரத்யேகமாக இரண்டு வெப்சீரிஸ்கள் வந்து இருக்கிறது.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வியாழக்கிழமையை குறி வைத்து வெளிவந்து இருக்கும் வெப்சீரிஸ் உப்பு, புளி, காரம். இந்த வெப்சீரிஸில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, தீபிகா, நவீன், ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றனர். ஹாட் ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடராக வெளியாக இருக்கும் இந்த தொடரை விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்து இருக்கிறது.

இதையும் படிங்க: திரும்புன இடமெல்லாம் கன்னிவெடி வச்சா எப்படி? கைது செய்யப்பட்ட வாசன் கதறல்…

ஏற்கனவே ஹாட்ஸ்டாரில் மத்தகம், லேபிள், ஹார்ட் பீட் உள்ளிட்ட இணைய தொடர்கள் பிரபலமாக இருக்கிறது. இதனால் இந்த தொடரும் ரசிகர்களை கவரும் என எண்ணப்படுகிறது. இந்த நிலையில் உப்பு புளி காரம் தொடர் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நான்கு எபிசோட்களாக வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் வெள்ளிக்கிழமை தோறும் ஹார்ட்பீட் வெப்சீரிஸ் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் நாலும் எபிசோட்கள் வெளிவரும் இந்த தொடரும் ரசிகர்களிடம் தற்போது பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படிங்க: தக் லைஃப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. கமல், சிம்பு சேர்ந்து செய்த அலப்பறை.. செம ட்ரீட் இருக்கு!..

இதுமட்டுமல்லாமல் இந்த எபிசோட்கள் முந்தைய நாள் நள்ளிரவு 12 மணிக்கே ஹாட்ஸ்டாரில் வெளியாகிவிடும் என்பதால் ரசிகர்களுக்கு மேலும் டைம்பாஸாகவும் அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இனி எல்லா வார கடைசியிலும் ஹாட்ஸ்டாரில் குடியிருக்க போறீங்க தானே?

 

Related Articles

Next Story