OTT Release: தமிழ் திரையுலகில் வாராவாரம் ஓடிடிக்கு வெளியீட்டுக்கு ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸுக்கு ஸ்கெட்ச் போட்டு இருக்கிறது.
அன்போடி கண்மணி: அர்ஜூன் அசோகன், அனகா நாராயணன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அன்போடி கண்மணி. இப்படம் அமோசான் பிரைம் ஓடிடியில் இந்த வாரம் வெளியாகி இருக்கிறது. அர்ஜூன் அசோகன் நடிப்பில் 3 மாதத்திற்குள் வெளியாகும் மூன்றாவது படம் இது.
மஜாக்: தெலுங்கில் வெளியான மஜாக் திரைப்படம் ஜீ5 ஓடிடியில் வெளியாக இருக்கிறது. சந்தீப் கிஷன், ரித்து வர்மா, ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் லவ் அண்ட் ரொமான்ஸ் கதையை அமைக்கப்பட்டுள்ளது.
அகத்தியா: ஜீவா, அர்ஜூன் சார்ஜா, ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் அகத்தியா. திரில்லர் கதையை மையமாக வைத்து பரபரப்பாக அமைக்கப்பட்டுள்ள கதை திரையரங்கில் சுமார் வெற்றியை பெற்றுள்ள நிலையில் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.

சப்தம்: ஆதி, சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் சப்தம். மூணாரில் நடக்கும் மர்ம கொலையின் பின்னணியை கண்டுபிடிக்க வரும் சவுண்ட் என்ஜினியர் ஆதி என்ன செய்தார் என்பதுதான் கதை. அமேசான் ஓடிடியில் 28ந் தேதி வெளியாக இருக்கிறது.
முபாசா: லியன் கிங்கின் அப்பா முஃபாசா கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படம். அர்ஜூன் தாஸ், நாசர், ரோபோ சங்கர், அசோக் செல்வன் உள்ளிட்டோர் டப்பிங் வாய்ஸில் படம் சூப்பர்ஹிட் அடிக்க தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
ஓம் காளி ஜெய் காளி: எம்எல்ஏக்கு நடக்கும் திடீர் தாக்குதலை செய்த குற்றவாளியை தேடி நடக்கும் விசாரணையினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள கதை. 1995ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஹாட்ஸ்டாரில் வெளியாகும் இப்படத்தில் விமல், குயின்ஸ்லி, திவ்யா துரைச்சாமி, பவானி ரெட்டி, சிவின் கணேசன், மகேஸ்வரி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.