2023ல் ஓடிடியில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படங்கள்.. மனதை கவர்ந்த ‘மாமன்னன்’...

ott
பல வருடங்களாகவே சினிமா என்றால் அது திரையரங்குகளில் மட்டுமே பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது தொழில் நுட்பங்கள் வளர்ந்து வீட்டிலிருந்தபடியே டிவியிலும், மொபைல் போனிலும் புது படங்களை பார்க்கும் வசதிகள் வந்துவிட்டது. இதைத்தான் ஓடிடி என சொல்கிறார்கள். சில புதிய படங்கள் தியேட்டருக்கு வராமல் நேரிடையாக ஓடிடிக்கு சென்றுவிடும். தியேட்டரில் வெளியான படங்கள் 3 வாரம் கழித்து ஓடிடியில் வெளியாகும். அப்படி 2023ம் வருடம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்களைத்தான் இங்கே பார்க்க போகிறோம்.
இதில் முதலிடத்தை பிடித்திருப்பது மாரி செல்வராஜின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேல், பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த மாமன்னன் திரைப்படம்தான். தியேட்டரில் வெளியானபோது அந்த அளவுக்கு வரவேற்பை பெறாத இந்த படம் ஓடிடியில் பலராலும் ரசிக்கப்பட்டது. வடிவேலுவை காமெடி நடிகராகவே பார்த்த ரசிகர்களுக்கு வடிவேல் தான் ஒரு குணச்சித்திர நடிகர் எனவும் நிரூபித்தார். பஹத் பாசிலை பல சாதியினரும் தங்களுடைய அடையாளமாக கொண்டாடிய விபரீதமும் சமூகவலைத்தளங்களில் நடந்தது. இந்த படத்தை தயாரித்த உதயநிதிக்கு இப்படம் நல்ல வசூலை கொடுத்தது.
அடுத்து, சித்தார்த் தயாரித்து நடித்த சித்தா படமும் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனது அண்ணன் மகள் ஒரு காமவெறி பிடித்த ஒருவரின் சிக்கி உடல் மற்றும் மனரீதியாக பாதிப்படைய அந்த சிறுமியை சித்தார்த் எப்படி மீட்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. சித்தார்த் மற்றும் அவருக்கு ஜோடியாக நடித்த நிமிஷா சஜயன் ஆகியோரின் நடிப்பு பாராட்டை பெற்றது.
விக்ரம் பிரபு, ஸ்ரீ, விதார்த், சானியா ஐயப்பன், அபர்மதி, ஸ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இறுகப்பற்று திரைப்படமும் தியேட்டரில் வரவேற்பை பெறாமல் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை பற்றி பாராட்டி பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்தனர்.
அதேபோல் கவினின் நடிப்பில் வெளிவந்த டாடா திரைப்படமும் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றது. மனைவி பிரிந்துவிட கவின் தனது மகனை எப்படி வளர்த்தார் என்பதை இப்படத்தில் காட்டியிருந்தனர். கவினுக்கு இப்படம் ஒரு ஹிட் படமாக அமைந்தது. அடுத்து வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் வெளிவந்த ‘கொன்றால் பாவம்’ படமும் ஒடிடியில் நல்ல வியூஸ்களை பெற்றது.

dada
அடுத்து, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளிவந்த ரன் பேபி ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த தி கிரேட் இண்டியன் கிச்சன் ஆகிய படங்களும் ரசிகர்களிடம் நல்ல வியூஸ்களை பெற்றது.