OTT: மொக்கை வாங்கிய சீசன் 2… மிரட்ட காத்திருக்கும் சீசன்3… ஸ்குவிட் கேம் டிரைலரை வெளியிட்ட நெட்பிளிக்ஸ்!

squid game
OTT: பிரபல கொரியன் வெப் சீரிஸ் ஸ்க்விட் கேம் (Squid Game) தனது மூன்றாவது சீசனுக்கான ட்ரைலரை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்ற இந்த தொடரின் புதிய ட்ரைலர் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
முதலாவது சீசன் 2021ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. அதில் பணத்திற்காக ஆபத்தான விளையாட்டுகளில் பங்கேற்கும் மனிதர்களின் கதை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சீரிஸ் உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தொடர்ந்து 2023ல் சீசன் 2 அறிவிக்கப்பட்டு கடந்தாண்டு இறுதியில் அந்த சீசன் வெளியானது. ஆனால் முதல் சீசனில் இருந்த அந்த பரபரப்பு இதில் நிறைய மிஸ்ஸிங்காக இருந்தது. அதுமட்டுமல்லாமல் சீசன் பாதியிலேயே முடிக்கப்பட்டது போல அமைந்து இருந்தது.

பழைய சீசன்களில் போலவே, இந்த சீசனிலும் ஆபத்தான விளையாட்டுகள் மீண்டும் தொடங்கப்பட்டது. நாயகன் கீ ஹூன் மீண்டும் அந்த விளையாட்டில் சேருகிறார். ஆனால் இப்போது அவர் வெறும் பணத்துக்காக இல்லை. தங்களை ஏமாற்றியவர்களை பழிவாங்கும் எண்ணம் கொண்டு சாகாமல் மக்களை மீட்க தான் வருகிறார்.
ஆனால் இரண்டாவது சீசன் இப்படி ஒரு மொக்கையாக அமைந்தது. இதற்கா இத்தனை ஆண்டு காத்திருந்தோம் என ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கினர். இனி தொடக்கத்தான் அந்த ஆச்சரிய அறிவிப்பு வெளியானது. 2025ல் சீசன் 3 வெளியாகும் என தெரிவித்தனர்.
இந்த முறையும் போட்டிகள் இருக்கிறது. ஆனால் மிரள வைக்கும் காட்சிகள் இருப்பதால் சீசன் 3 கண்டிப்பாக ஏமாற்றாது என நம்பப்படுகிறது. மேலும், பரபரப்பை உருவாக்கி இருக்கு இந்த சீசன் வரும் ஜூன் 27-ல் நெட்ஃபிளிக்ஸில் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.