தங்கலான் ஓடிடி ரிலீஸ்... பிளானில் தீடீர் சேஞ்ச்... அப்ப அந்த நிறுவனம் கிடையாதா...?
தமிழில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியான திரைப்படம் தங்கலான். இந்த திரைப்படத்தில் சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தார்கள். பா ரஞ்சித் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக சற்று தொய்வை சந்தித்தது.
இந்த படத்தில் சுதந்திரப் போராட்ட காலத்தில் நடந்த சம்பவத்தை மிகவும் சிறப்பாக எடுத்திருந்தார்கள். அந்த காலகட்டத்தில் கேஜிஎபில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்றது. அதிலும் நடிகர் விக்ரமின் நடிப்பு ரசிகர்களை பிரமிக்க வைத்தது என்று தான் கூற வேண்டும். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.
படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் அந்த கதாபாத்திரங்களாகவே மாறி சிறப்பாக நடித்திருந்தார்கள். ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த திரைப்படம் 100 கோடி வசூலை எட்டி இருந்தாலும், படத்தில் இடம்பெற்று இருந்த சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனால் வசூலில் சற்று சறுக்கல் ஏற்பட்டது. அடுத்ததாக இந்த திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள்.
நெட்பிளிக்ஸ் நிறுவனம் இப்படத்தை 60 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக கூறப்பட்டிருந்தது. அதன்படி கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருந்தது. ஆனால் சொன்னபடி இப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை. இந்த படம் திரையரங்குகளில் எதிர்பார்த்தபடி வசூல் செய்யவில்லை. மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகள் என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் தங்களது தொகையை குறைப்பதாக கூறியிருந்தது.
இதனால் தயாரிப்பாளருக்கும், நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதன் காரணமாக ஓடிடியில் தங்கலான் திரைப்படம் ரிலீஸ் ஆவது தாமதமாகி வந்தது. தற்போது பிளானில் ஒரு சிறிய மாறுதல் ஏற்பட்டுள்ளது. அதன்படி தங்கலான் திரைப்படம் நெட்பிளிக்ஸ் இல்லாமல் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் தங்கலான் திரைப்படத்தை அமேசான் நிறுவனம் அதிகளவு தொகைக்கு வாங்கி இருப்பதாகவும், விரைவில் இந்த திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.