தங்கலான் ஓடிடிக்கு மீண்டும் பிரச்னை… விக்ரமுக்கு இப்படி ஒரு சோதனையா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:31:05  )

Thangalaan: விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் இந்த வாரம் ஓடிடி ரிலீஸில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அது தள்ளி போயிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தங்கலான். கேஜிஎப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இப்படத்தில் விக்ரமின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றிருந்தது.

படம் வெளியாகி பல வாரங்கள் கடந்தும் இன்னும் ஓடிடி வரவில்லை. இந்நிலையில் ராஜா சார்பில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய கடன் பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் உரிமையாளர் ஞானவேல் ராஜா, ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 99 கோடி 22 லட்சத்து கடன் பெற்றிருந்தார். இதில் 45 கோடி கொடுத்து விட்ட நிலையில் 55 கோடியை கொடுக்காமல் விதிகளை மீறி செயல்பட்டு இருக்கிறார்.

இதனால் அவர் தயாரிப்பில் வெளியாக இருக்கும் கங்குவா திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தங்கலான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்திருக்கிறது.

அதில் ஸ்டுடியோ கிரீன் தரப்பு, கங்குவா திரைப்படம் நவம்பர் 7ஆம் தேதிக்கு முன்னர் திரைக்கு வராது. அதுபோல தற்போது தங்கலான் திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்பட மாட்டாது எனவும் உறுதி அளித்துள்ளனர். இதனால் தான் இந்த முறையும் தங்கலான் ரிலீஸ் தள்ளிப்போய் இருக்கிறது.

Next Story