தங்கலான் ஓடிடி லாக்கானதுக்கு இதான் காரணமா? புதுசு புதுசா கிளப்புறீங்க சாமி!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:15  )

Thangalaan: விக்ரமின் முக்கிய படமாக தங்கலான் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிர்ச்சிகரமான அப்டேட் இணையத்தில் கசிந்து இருக்கிறது.

பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ஓடிடி ரிலீஸுக்கு வர ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்ப்பை அதிகரித்து விடுவார்கள். ஒரு திரைப்படங்கள் திரையரங்கில் வெளியான ஒரு மாதம் கழித்து ஓடிடிக்கு ரிலீஸுக்கு வரும். ஆனால் இதில்தான் பிரச்னையே.

விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் ரிலீஸாகி பல வாரங்களை கடந்தும் இன்னும் ஓடிடிக்கு வராமல் இருக்கிறது. ஆனால் தங்கலான் ஓடிடி தள்ளிப்போவதற்கும் காரணம் இருப்பதாக தற்போது விவரம் வெளியாகி இருக்கிறது.

தங்கலான் ஓடிடி வெளியீட்டிற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அம்மனுவில், தங்கலானில் வைணவத்தை நகைச்சுவையாகவும், புத்த மதத்தை புனிதமாக சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். படம் ஓடிடியில் வெளியிட்டால் இரு சமூகத்தினரிடையே மோதல்களை ஏற்படுத்தும் என மனுதாரர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு வெளியான பிறகுதான் தங்கலான் ஓடிடியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கலான் படத்தை முதலில் செப்டம்பர் 20ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. உலகளவில் இப்படம் ரூ 100 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. சியான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் கால்டாகிரோன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பு செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story