OTT: இந்த வாரம் வெளியாகி இருக்கும் ஓடிடி படங்கள்… லேடி விஜய் சேதுபதியா இருப்பாங்க போலயே!

OTT: ஓடிடியில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் திரைப்படங்களின் பட்டியல் ஆச்சரியப்படுத்து வகையில் அமைந்துள்ளது.
இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் எழுதி இயக்கி இருக்கும் திரைப்படம் காதல் என்பது பொதுவுடைமை. மலையாளத்தில் வெளியான இப்படத்தில் வினீத், ரோகினி, லிஜோமோல் ஜோஸ் , அனுஷா பிரபு, காலேஷ் மற்றும் தீபா ஆகியோர் நடித்துள்ளனர்.
பெண்களுக்கு இடையேயான காதலுக்கும் சமூகத்தில் உருவாகும் சிக்கல்களை எடுத்து பேசுகிறது. இந்த படம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் லிஜோ மோல், ஹரிகிருஷ்ணன், லாஸ்லியா ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் ஜென்டில்வுமன். தன் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்த மனைவி அவனை கொல்லுகிறாள்.

ஆனால் காதலன் பல நாட்களாக வராமல் போக அவன் வீட்டிற்கு செல்கிறாள் காதலி. வீட்டில் எந்த தகவலும் கிடைக்காமல் போக போலீஸை நாட பின்னர் நடக்கும் கதை தான் ஜென்டில்வுமன். இப்படம் டெண்ட்கொட்டா ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.
தொடர்ந்து இந்த வாரம் லிஜுமோலின் மூன்றாவது படமாக ரிலீஸ் ஆகி இருக்கிறது தாவீத். பாக்கிஸிங்க சம்மந்தப்பட்ட படம் என்பதால் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தலாம். ஆனால் படம் பல இடங்களில் கதையின் ரூட்டை தாண்டி செல்கிறது. இந்த வாரம் ஜீ தமிழ் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.
தந்தை மற்றும் மகளுக்கு ஏற்படும் பிரச்னையில் அவர் தற்கொலை செய்துக்கொள்ள அவரின் கடைசி காரியத்தில் பிணத்தை நகர்த்த முடியாமல் போக எமகாதகி படம் சூடு பிடிக்கிறது. யூட்யூபர் ஸ்டார் நாகேந்திர பிரசாத் நடித்து இருக்கிறார். படம் சமூக அவலங்களை ஹாரர் ஜானரில் அழகாக எடுத்து சொல்லி இருக்கின்றனர். படம் ஆஹா ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.
ஆங்கிலம் தெரியாவதவர்கள் கூட ஹாலிவுட்டில் விரும்பி பார்க்கும் ஒரு படம் அவெஞ்சர்ஸ் சீரிஸ். அதில் வரும் சூப்பர் ஹீரோக்களுக்கும் தனி படம் எடுத்து வருகின்றனர். இதில் முக்கியமான ஃபேமஸ் கேரக்டர் கேப்டன் அமெரிக்கா. அந்த சீசனின் 4வது படம் வெளியாகி இருக்கிறது.
வெப் சீரிஸில் நடித்த சாம் வில்சன் இதில் கேப்டன் அமெரிக்காவாக நடித்து இருக்கிறார். முதல் சீசன்களை போல பரபரப்பை இல்லை என்றாலும் கண்டிப்பாக டைம் பாஸாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.