OTT: டல்லடிக்கும் ஓடிடி ரிலீஸ்… இந்த வார படங்களின் அப்டேட்… சேதாரம் ஜாஸ்திதான்!

OTT: தமிழ் சினிமாவில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் திரைப்படங்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. பொதுவாக பிரபல படங்கள் உள்ளிட்ட எந்த லிஸ்ட்டும் இந்த வாரம் இல்லாமல் இருப்பது ரசிகர்களுக்கு கவலையான சேதிதான்.
குணசித்திர வேடங்களில் நடித்து வந்த சூப்பர் குட் சுப்பிரமணி, ஹீரோவாக நடிக்கும் படம் பரமன். பழ கருப்பையா வில்லன் வேடத்தில் நடிக்க வையாபுரியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சன் நெக்ஸ்ட்டில் இப்படம் வெளியாக இருக்கிறது.
மறைந்த சின்னத்திரை நடிகை விஜே சித்ரா நடிப்பில் கால்ஸ் திரைப்படமும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. சின்னத்திரை நடிகை கேப்ரியல்லா, துஷ்யந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வருணன். இப்படத்தினை ஜெயமுருகன் இயக்கியுள்ளார். ஆஹா ஓடிடியில் படம் ரிலீஸாகியுள்ளது.
சதாசிவம் சின்னராஜ் எழுதி இயக்கிய, ஹீரோவாக நடித்துள்ள 'இஎம்ஐ- மாதத் தவணை' திரைப்படம். சாய் தான்யா, பேரரசு, பிளாக் பாண்டி, ஆதவன், ஓஏகே சுந்தர், லொள்ளுசபா மனோகர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்க படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

அருண் டி ஜோஸ் இயக்கிய மலையாள திரைப்படம் 'பிரோமன்ஸ்' சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியது. ஆங்கில திரைப்படமான பேட்பாய் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகி இருக்கிறது. ருத்ரவீணா என்ற திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகி இருக்கிறது.
இதுமட்டுமல்லாமல் பல ஆங்கில வெப்தொடர்களும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. தமிழ் ரசிகர்களுக்கு பெரிய அளவு இந்த வாரம் வேலை இல்லை என்றாலும் மற்ற மொழிகளில் நல்ல படம் ரிலீஸாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.