Thuglife: கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் படத்தின் ரிலீஸ் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் ஓடிடி ரசிகர்களுக்கு தற்போது ஒரு சோகச் செய்தி வெளியாகி இருக்கிறது.
மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்து வரும் திரைப்படம் தக் லைஃப். கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் அறிமுக டீசரே பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வித்தியாசமான இடத்தில் சூட் செய்யப்பட்டு இருந்ததால் வரலாற்று படமாக இருக்குமோ என எதிர்பார்க்கப்பட்டது.
அப்படத்தில் பிரபல நடிகர்களான ரவிமோகன் மற்றும் துல்கர் சல்மான் இருவரும் இணைய இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அச்சமயத்தில் துல்கர் பலமொழிகளில் பிஸியாக நடித்து வந்ததால் இப்படத்தில் இருந்து திடீரென விலக முடிவு எடுத்தார்.
அவருடைய கேரக்டரில் நடிகர் சிலம்பரசனை படக்குழு முடிவு செய்ய ஏற்கனவே அவருடன் இருந்த முரண்பாடு காரணமாக ரவி மோகன் இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து சிலம்பரசன் மற்றும் அசோக் செல்வன் இருவரும் இப்படத்தில் இணைந்தனர்.
படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடந்தது. முதல் முறையாக கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் இணைவதால் இப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது. திரிஷாவும் சிம்புவும் ஜோடியாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அபிராமி மற்றும் திரிஷா இருவரும் கமல்ஹாசனின் ஜோடியாகி இருக்கின்றனர். மேலும் இப்படத்தில் சிலம்பரசன் வில்லனாக நடிக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுடன் இப்படம் ஜூன் 5-ம் தேதி பிரம்மாண்டமாக வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் நடத்தப்பட இருக்கிறது. இதனால் சிலம்பரசன் ரசிகர்கள் தொடர்ச்சியாக இப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். பொதுவாக பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு ஆறு வாரங்கள் கழிந்த பின்னரே ஓடிடிக்கு வரும் என்பது விதி்யாக இருக்கிறது.
ஆனால் அப்படங்களின் வசூல் பல இடங்களில் அடிப்படும் போது மூன்றிலிருந்து நான்கு வாரங்களுக்குள் ஓடிடிக்கு வந்து விடுகிறது. இந்நிலையில் தக் லைஃப் திரைப்படம் ரிலீஸாகி 8 வாரம் கழித்தே ஓடிடிக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் நடந்தது இல்லை. நாங்கள் பிளான் செய்தே நிறுவனத்துடன் பேசினோம். அவர்களும் ஒப்புக்கொண்டனர். தமிழ் சினிமாவில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை என்றும் கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார். ஜூன்5ல் படம் வெளியானால் ஓடிடிக்கு ஜூலை கடைசியில் தான் வரலாம்.
ஆனால் இப்படத்தின் வசூல் விஷயங்களும் இதில் மாற்றம் இருக்கும் என்ற பேச்சுகளும் இருக்கிறது. இருந்தும் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், கமல்ஹாசன், சிம்பு கூட்டணி என்பதால் படம் பெரிய வரவேற்பை பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார்…
கோலிவுட்டில் உள்ள…
தமிழ் சினிமாவில்…
தமிழ் சினிமாவில்…
இந்திய சினிமா…