1. Home
  2. Latest News

ஓடிடியில் பல கோடிகளுக்கு விற்பனையான டாப் 4 படங்கள்!.. பிரபாஸ அடிச்சுக்க ஆளே இல்ல போலயே!..


தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என எந்த மொழி படமாக இருந்தாலும், எந்த நடிகர்களின் திரைப்படமாக இருந்தாலும் திரையரங்குகளில் வெளியாகி சில வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியாவது வழக்கம் தான். பெரிய படங்கள் தொடங்கி சிறிய படங்கள் வரை அனைத்துமே ஓடிடியில் ரிலீஸாகி வருகின்றன. இந்திய சினிமாவில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார் என்று ஏராளமான ஓடிடி பிளாட்பார்ம் இருக்கின்றது.

பொதுவாக பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளுக்கு வருவதற்கும் முன்னதாகவே இந்த நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஓடிடி உரிமையை பல கோடி கொடுத்து வாங்கி விடுகிறார்கள். இதில் சிறிய அளவு பட்ஜெட்டில் அல்லது வளர்ந்து வரும் நடிகர்கள் படங்கள் மட்டுமே திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற பிறகு ஓடிடி நிறுவனம் வாங்குகின்றது. அப்படி இந்திய சினிமாவில் பல கோடிக்கு விற்பனையான டாப் 4 திரைப்படங்கள் குறித்து நாம் பார்ப்போம்.

புஷ்பா 2:


சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் புஷ்பா 2. இந்த திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 275 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருந்தது. இப்படம் டாப் 4 பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கின்றது.

ஆர்ஆர்ஆர்:


இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவகன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2022 மார்ச் 25ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் ஆர்ஆர்ஆர். இந்த திரைப்படம் ஆஸ்கார் வரை சென்று மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை disney+ hotstar 300 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தது. இப்படம் டாப் 4 பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கின்றது.

கேஜிஎஃப் 2:


இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ், ஸ்ரீநிதி செட்டி ஆகியோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் கேஜிஎஃப் 2. இந்த படம் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 1250 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்தது. இந்த திரைப்படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் 320 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது. இப்படம் டாப் 4 பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கின்றது.

கல்கி 2898 AD:


இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் கல்கி 2898 AD. இந்த திரைப்படம் இந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. 600 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது, இந்த திரைப்படத்தை netflix மற்றும் அமேசான் பிரைம் நிறுவனம் இணைந்து 375 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருந்தது. இந்த திரைப்படம் தான் டாப் 4 பட்டியலில் முதலாவது இடத்தில் இருக்கின்றது

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.