ரஜினிக்கு கிடைத்த பல்பு… டாப் ஸ்டார் தட்டி தூக்கிட்டாரே… என்ன சேதி தெரியுமா?
Prasanth: நடிகர் பிரசாந்த் தன்னுடைய இரண்டாவது சினிமா கேரியரை வெற்றிகரமாக தொடங்கி இருக்கும் நிலையில் மீண்டும் ஹிட்டை தன்னுடைய லிஸ்ட்டில் இணைத்திருக்கிறார்.
பிரசாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர். வெற்றி படங்களை கொடுத்து வந்த பிரசாந்த் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். தொடர்ச்சியாக பல வருடம் நடிப்பிற்கு பிரேக்கும் கொடுத்தார்.
பல வருட இடைவேளைக்கு பின்னர் அந்தகன் திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார். ஹிந்தியில் ஹிட்டடித்த அந்தாதூண் படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்கினார். முதலில் இரண்டு இயக்குனர்கள் படத்தில் இருந்து விலக தியாகராஜனே இப்படத்தினை இயக்க முடிவெடுத்தார்.
2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட படப்பிடிப்புகள் தொடர்ச்சியாக நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் படத்தின் ரிலீஸ் மட்டும் பலமுறை தள்ளிப்போனது. ஒரு கட்டத்தில் பெருவிழாக்களில் வாழ்த்து சொல்வதற்கு மட்டுமே இப்படம் என ரசிகர்கள் கலாய்த்து வந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் படம் ஆகஸ்ட் மாதன் ரிலீஸானது.
படத்தில் பிரசாந்தின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றுள்ளது. மேலும் சந்தோஷ் நாராயணின் இசையும் ஹிட்டடிக்க அந்தகன் படத்தின் வசூலும் பெரிய அளவில் குவித்தது. படத்திற்கும் நல்ல விமர்சனமே குவிந்தது. இதை தொடர்ந்து பிரசாந்தின் இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றி கண்டது.
இந்நிலையில் அந்தகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் அக்டோபர் 30ந் தேதி அமேசான் தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் லப்பர் பந்து படத்தின் ஓடிடி ரிலீஸ் அக்டோபர் 31ந் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் லால் சலாம் திரைப்படத்தின் ஓடிடி இன்னமும் முடிவாகவே இல்லை. பல மாதங்களாக கிடப்பில் இருக்கும் இப்படத்திற்கு பின் வந்த சின்ன பட்ஜெட் படங்கள் ஓடிடிக்கு முந்துவது ஆச்சரியத்தினை ஏற்படுத்தி உள்ளது.