More
Categories: Cinema News latest news

தியேட்டரில் மாஸ் ஹிட்டான படங்கள்… ஓடிடியில் வெளியாகி ஃப்ளாப் ஆவது ஏன்… அதிர வைக்கும் பின்னணி

தியேட்டரில் ஹிட் கொடுத்த படங்கள் ஓடிடியில் ரிலீஸாகி மோசமான விமர்சனங்களை கூட பெற்று வருகிறது. இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவலால் கோலிவுட் வட்டாரமே கொஞ்சம் கவலையில் தான் இருக்கிறதாம். ஓடிடியில் ஏன் இந்த படங்கள் ஓடவில்லை. படம் நல்லாவே இல்லை எனச் சொல்லும் அளவுக்கு என்ன நடக்கிறது.

Advertising
Advertising

முதலில் தியேட்டரில் படம் பார்ப்பது போல டிவியில் படம் பார்ப்பது ஒன்று போல இருக்காது. தியேட்டரில் மாஸ் காட்சியாக பார்க்கப்பட்டது டிவியில் சப்பென முடியும். இதனால் படத்தின் அந்த பரபரப்பு கூட குறைந்து விடும். ஒரு கட்டத்தில் பார்ப்பவர்களுக்கே இதுதான் நடக்கும் என தெரிந்து விடும். வெற்றி படங்கள் சொதப்புவது இங்கு தான்.

இதையும் படிங்க: தியேட்டர்ல ஹிட்… ஓடிடியில் ஃப்ளாப்… ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய லேட்டஸ்ட் திரைப்படங்கள்…

சில படங்களை தான் அடிக்கடி பார்க்க பிடிக்கும். பெருவாரியான படங்கள் ஒரு முறை பார்த்தாலே போதும் என்று தான் தோன்றும். அந்த வகை படங்கள் ஓடிடிக்கு வரும்போது பார்ப்பவர்களுக்கே அலுப்பு தான் தட்டும் என்பதால் அதை பெரிதாக விரும்புவதில்லை.

தியேட்டரில் பார்க்கும் போது எல்லா சீன்களை பார்ப்பதால் அதனுடன் நம்மால் ஒன்ற முடியும். ஓடிடி என்றால் அதை ஈசியாக ஓட்டிவிடலாம். பாடல்களை பலர் பார்ப்பதே இல்லை. இதுவே நம்மை படத்துடன் ஒன்றவிடாது. அதுவே பலருக்கு அந்த படத்தின் மீதான ஆர்வம் குறைந்து விடும். காந்தாரா, டான், விருமன், எதற்கும் துணிந்தவன், வெந்து தணிந்தது காடு, நானே வருவேன் உள்ளிட்ட படங்கள் இந்த பிரச்னையால் தான் ஓடிடியில் விமர்சிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan

Recent Posts