OTT Watch: ஓம் காளி ஜெய் காளி விமர்சனம்!.. விமலோட விலங்கு வெப்சீரிஸ் அளவுக்கு வொர்த்தா?

by Akhilan |   ( Updated:2025-04-05 10:28:06  )
OTT Watch: ஓம் காளி ஜெய் காளி விமர்சனம்!.. விமலோட விலங்கு வெப்சீரிஸ் அளவுக்கு வொர்த்தா?
X

om kaali jai kaali

Om Kaali Jai Kaali: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் ஓம் காளி ஜெய் காளி வெப் சீரிஸ் விமர்சனத்தை இங்கே காணப்போகிறோம். விமல், கஞ்சா கருப்பு, புகழ், பாவ்னி ரெட்டி, திவ்யா துரைசாமி, பிக்பாஸ் குயின்ஸி, டக்ளஸ் உள்ளிட்ட பல தெரிந்த முகங்கள் இதில் நடித்துள்ளனர். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் வெளியான சுழல் போல இதிலும் சிறு தெய்வ வழிபாட்டை இயக்குனர் ஜெகநாத் கையிலெடுத்துள்ளார்.

சரி விமல் வெப்சீரிஸில் கில்லியாச்சே என ஓடிடியில் ஓடவச்சு பார்க்கணும்னு நினைச்சா இதை முதலில் படிங்க.. ஆரம்பத்தில், பிக் பாஸ் குயின்ஸி மற்றும் அவரது காதலார் துரத்தப்படுகின்றனர். குயின்ஸியின் காதலர் கொல்லப்பட்டு விடுகிறார். குயின்ஸி தப்பி சென்று வேஷம் கட்டும் ஊரில் சிக்குகிறார்.

அங்கே அவர் கிணற்றில் குதித்துவிட அவரை விமல் காப்பாற்றப்படுவதையே கதை சுழற்சியாக காட்டுகிறது. இந்தச் சீரிஸில் இரண்டு அண்ணன்கள் மற்றும் தங்கச்சி இருக்கின்றனர். தன் தங்கையே அரசியல்வாதியிடம் அனுப்புகிறார் அண்ணன்.

அரசியல்வாதி டிரைவர் அவளை கூப்பிட்டு போயிட்டு வரும்போது அவளை தன் வசப்படுத்துகிறார். அவன் கூப்பிட்டு போகும்போதே அவளை இன்னொருத்தனான அண்ணனின் கூட்டாளி வேறு அந்த பெண்ணை கவர முயற்ச்சிகள் நடக்கின்றன.

om kaali jai kaali

இதற்கிடையில், குடும்பத்திற்குள் கிளை கதை வேறு ஓடுகிறது. ஒரு அண்ணனின் மனைவியுடன் தம்பி தவறாக இருக்கிறான். இதை பார்க்கும் அண்ணன் தம்பிக்கு கொடுக்கும் தண்டனை தான் செய்யும் தவறை அவன் மேல் போட்டு ஜெயிலுக்கு அனுப்பி விடுவது. (அடங்கப்பா)

இப்படி குலசேகரப்பட்டினம் திருவிழாவை சுற்றி நடைபெறும் கதையில் ஏகப்பட்ட தேவையற்ற விஷயங்களும் பழிவாங்கும் உணர்ச்சியுடன் நடக்கும் கொலைகளும் இதற்கு இடையில், இதில் சம்மந்தமே இல்லாமல் சாமி வேஷம் கட்டும் விமல் சிக்கி இவர்களுடன் ஹீரோ சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார். குடும்பத்தின் விரோதங்களை வெளிப்படுத்தும் விதமாக, அந்த அரசியல்வாதியும் மற்ற முக்கிய கதாபாத்திரங்களும் அத்துடன் கலந்து ஒரு கதையை கொடுக்க நினைத்ததுக்கு இப்படி ராங் டர்ன் எடுத்தது தான் இயக்குநர் செய்த மிகப்பெரிய தவறு.

விமல், பிக் பாஸ் பாவனி ரெட்டி, விஜய் டிவி புகழ், பிக் பாஸ் குயின்ஸி உள்ளிட்டோரின் நடிப்பு மட்டுமே ஆறுதல். இன்னமும் கொஞ்சம் கதை மற்றும் திரைக்கதையில் இயக்குனர் கவனம் செலுத்தியிருந்தால் ஓம் காளி ஜெய் காளி விமலுக்கு இன்னொரு வொர்த்தான விலங்கு வெப்சீரிஸ் போல அமைந்திருக்கும்.

Next Story