OTT Watch: சார்பட்டா பரம்பரை பாத்து ஃபயர் விட்டவங்க பார்க்க கூடாத படம்… தாவீத் எப்படி இருக்கு?

by Akhilan |   ( Updated:2025-04-21 07:22:05  )
OTT Watch: சார்பட்டா பரம்பரை பாத்து ஃபயர் விட்டவங்க பார்க்க கூடாத படம்… தாவீத் எப்படி இருக்கு?
X

OTT Watch: ஓடிடியில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் தாவீத் திரைப்படத்தின் பிளஸ் மைனஸ் உங்களை தெரிந்து கொள்ளும் தொகுப்பு தான் இது.

ஆண்டனி சர்க்கஸ், லிஜிமோல் ஜோஸ், விஜயராகவன், சைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தாவீத். அறிமுக இயக்குனர் கோவிந்த் விஷ்ணு இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தோட ஹீரோ அபு. கிக் பாக்ஸிங் ஆர்வம் உள்ளவர். இதனாலேயே பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் மட்டும் பவுன்சராக சென்று விட்டு மற்ற நேரங்களில் வீட்டில் சும்மா இருந்த நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கிறார்.

அப்படி ஒரு நேரத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் பவுன்சராக அபு செல்ல அங்கு இருவருக்கிடையில் தள்ளுமுள்ளு நடந்துவிடுகிறது. இதனால் பிரபல குத்துச்சண்டை வீரர் அபுவை தன்னுடன் மோதுமாறு மிரட்டல் விடுகிறார்.

அப்படி என்னுடன் மோதி நீ ஜெயித்தால் ஒரு மில்லியன் டாலர் பரிசாக தருவதாக அவருக்கு ஆசை காட்டுகிறார். இதற்கு அதுவும் ஒப்புக்கொள்ள இருவருக்கிடையும் நடக்கப் போகும் குத்துச்சண்டை மையமாக வைத்துதான் இக்கதை மொத்தமாக நகர்ந்து இருக்கிறது.

பொதுவாக இப்படிப்பட்ட ஒரு கதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஆர்வத்தை கொடுக்கும். ஆனால் இங்கு அது தலைகீழாக மாறி இருக்கிறது. திரைக்கதையில் எந்த புதுமையும் இல்லாமல் பழைய மாவை அரைத்தது போல பல இடங்களில் அலுப்பை தட்டுகிறது.

லிஜிமோல் போன்று ஒரு நடிகை வைத்துக்கொண்டு அவரை சாதாரணமாக நடிக்க வைத்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தானும் ஹீரோயின் என்ற ரகத்தில் சில காட்சிகளில் நடித்துவிட்டு அவர் நகர்ந்திருக்கிறார்.

படத்தின் ஹீரோ ஆண்டனி வர்கீஸ் இப்படத்திற்காக உடல் எடை குறைத்து மிகவும் உழைத்து இருக்கிறார். அதற்காகவே அவர் சபாஷ் போடலாம். இருந்து நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தணுமே பாஸ். தமிழில் ஹிட்டடித்த சார்பட்டா பரம்பரை ஃபேனா இருந்தா இந்த பக்கம் போகாதீங்க.

Next Story