OTT Watch: அட இந்த கதையை கூட இப்படி ஜமாய்ச்சிருக்காங்களே… KA படம் எப்படி இருக்கு?

KA
OTT Watch: தற்போது சினிமா ரசிகர்கள் ஓடிடியில் பல மொழிகள் படம் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அதில் நீங்கள் மிஸ் பண்ணக்கூடாத முக்கிய படமாக சமீபத்தில் வெளியான KA இடம்பெற்றுள்ளது. விரிவான விமர்சனம் இதோ!
ஒரு இரவிலே முகமூடி அணிந்த ஒருவன், அவனுடைய ஆட்களிடம் ஒரு முக்கியமான பணியை கொடுக்கிறான். அபிநய வாசுதேவ் மற்றும் ராதாவை பிடிக்க சொல்லுகிறான். பெரிய சண்டைக்கு பிறகு வாசுதேவ் மயக்கத்தில் பிடிக்கப்படுகிறான்.
விழிக்கும்போது, அவன் ஒரு இருட்டான அறையில் விழிக்கிறார். அங்கே ஒரு மேசையில் ஒரு விசித்திரமான கடிகாரம் இருக்கிறது. அந்த மாஸ்க் தலைவன் வருகிறான். வாசுதேவிடம், "அபீத் ஷெய்க்கிற்கு எழுதப்பட்ட ஒரு கடிதத்தைப் பற்றி நீ படிச்சியா?"னு கேட்கிறான்.

வாசுதேவ் தெரியாதுன்னு சொல்றார். ஆனால் அந்த தலைவன், அந்த கடிகாரம் ஒரு ஹிப்னாடிக் சாதனம் என்று சொல்லி, அதை இயக்க ஆரம்பிக்கிறான். அந்த கடிகாரம் வாசுதேவின் கடந்த காலத்தை வெளிச்சமிடுகிறது.
அவன் கண்டுபிடிக்கும் அதிர்ச்சி என்னவென்றால் இதற்குப் பின்னால் இருக்கும் தலைவர், அவனையே மாதிரி தோற்றமுள்ள ஒருவன். ஏன் அவன் வாசுதேவை கடத்தினான். அவனுக்கு என்ன வேண்டும் என்பதை மெதுவான திரைக்கதையில் சொன்னாலும் படம் ரசிகர்களை கண்டிப்பாக கவரும்.
யாரும் எதிர்பார்க்காத சூப்பர் ட்விஸ்ட்டான கிளைமேக்ஸ். தெலுங்கில் சக்கை போடு போட்ட திரைப்படம் தமிழ் டப்பிங்குடன் அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டு இருக்கிறது. பழி வாங்கும் கதையை இப்படி கூட எடுக்கலாமா என யோசிக்க வைத்துவிட்டார்கள். கண்டிப்பாக பார்ப்பதற்கு வொர்த்!