OTT Watch: ஓடிடி பிரியர்களுக்கு அடுத்த ஸ்பெஷலாக இன்று ஹரி பாஸ்கர் மற்றும் லாஸ்லியா நடிப்பில் வெளியான மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் படத்தின் ஆன்லைன் திரை விமர்சனம் குறித்த தொகுப்புகள்.
தமிழ் ரொமான்டிக் காமெடியை புதிய பரிமாணத்தில் பரிமாற வேண்டும் என நினைத்த படம் இது. கதையோ ரொம்பவே சுமார். இந்த படம் ஹரி பாஸ்கர் மற்றும் லாஸ்லியா ஆகியோரை முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர்.
நடிப்பில் ஹிட்டடித்த ஹரி பாஸ்கருக்கு சொல்ல வேண்டாம். ஆனால் லாஸ்லியா நியூஸ் ரீடிங்கையே செய்யலாம் போல. இதான் சொல்லுவாங்க தெரிஞ்ச விஷயத்தை விட்டவணும் கெட்டான். தெரியாத விஷயத்தை தொட்டவணும் கெட்டான். லாஸ்லியா தான் அதுக்கு சமீபத்திய எடுத்துக்காட்டு.

மொத்த படமுமே அவரை சுற்றியே நடக்கிறது. இருந்தும் யாரோ எவரோ என நடித்து கொண்டு இருக்கிறார். அதுபோல ஹரி பாஸ்கர் மற்றும் லாஸ்லியா இருவருக்குமே கெமிஸ்ட்ரி கூட வொர்க் அவுட் ஆகவில்லை. திரைக்கதையை கூட சுவாரஸ்யமாக சொல்ல படாமல் போனதுதான் பிரச்னை.
மியூசிக் பரவாயில்லை ரகம் என்றாலும் பல இடங்களில் படத்துடன் கனெக்ட் செய்ய முடியவில்லை. நீங்க ரொமான்ஸ் காமெடி ரசிகர்கள் என்றால் ஒரே ஒருமுறை பார்க்கலாம். இல்லனா ஸ்கிப் பண்ணிட வேண்டியதுதான் ரொம்பவே நல்லது.