OTT Watch: தமிழ் ரசிகர்களுக்கு மற்ற மொழி படங்களில் அதிக ஆர்வத்தை கொடுப்பது மலையாளம் தான். அப்படி இந்த வாரம் வெளியாகி இருக்கும் பிரவின்கூடு ஷப்பு படத்தில் இருக்கும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் குறித்த விமர்சனம்.
பொதுவாக எந்த மொழியில் நடிகர் என்றாலும் வருடத்திற்கு ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் கொடுப்பதற்கு பெரிய போராட்டமாக தான் இருக்கும். ஆனால் மலையாளத்தின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனரான பேசில் ஜோசப் கடந்த சில மாதங்களாகவே மாதம் ஒரு திரைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இந்த வார லிஸ்டில் இணைந்திருப்பது பிரவீன்கூடு ஷப்பு. ஒரு கள்ளு கடையில் திடீரென அதன் முதலாளி இறந்து கிடக்கிறார். அப்போ அங்கு இருக்கும் 10 பேரை சுற்றி கதை நகர்கிறது. விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி வேடத்தில் பேசில் ஜோசப். சாதாரண கதையை திரைக்கதையில் மிரட்டி விட்டு இருக்கின்றனர்.
முக்கியமாக இப்படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்கும் ஷொபீன் ஷாபீர் தன்னுடைய அக்மார்க் நடிப்பால் அசத்தி விட்டு இருக்கிறார். இன்வெஸ்ட்டிகேஷன் திரில்லர் படத்தில் பிளாக் காமெடியை இறக்கிய விதமும் அக்மார்க் அசத்தலாக அமைந்துள்ளது.

முதல் பகுதி சற்று ஸ்லோவாக சென்றாலும் இரண்டாம் பகுதி சூடு பிடிக்கிறது. இன்ஸ்வேடிகேட்டிவ் ஜானர் விரும்பிகளுக்கு இது செம படமாக அமைந்தாலும் சில இடங்களில் லாஜிக் பிரச்னை படத்தின் மீது கவனத்தை குறைக்கிறது. கிளைமேக்ஸ் கணிக்க முடிந்தாலும் ஒருமுறை பார்க்க செம படம்.
இப்படத்திற்கு பெரிய பலமே மியூசிக் டைரக்டர் போட்ட பின்னணி இசைதான். சரியான இடங்களில் நம்மையும் சிலர்க்க வைக்கிறது. சோனி லைவ் ஓடிடியில் தமிழ் டப்பிங்கிலும் இருக்கு மிஸ் பண்ணாம வாட்ச் பண்ணிடுங்க.