ஓடிடி அப்டேட்களின் லிஸ்ட்… வொர்த்தா? வெத்தா? பறக்கும் எக்ஸ் விமர்சனங்கள்!

Published On: March 25, 2025
| Posted By : Akhilan

OTT Watch: ஓடிடியில் இந்த வார நாட்களிலேயே சீரிஸ்கள் சில வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் எக்ஸில் சொல்லி இருக்கும் விமர்சனங்களை வைத்து இதை பார்க்கலாமா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்துகோங்க!

ஒவ்வொரு வாரமும் வார இறுதியில் ஏகப்பட்ட தமிழ் உள்ளிட்ட பல்வேறு படங்கள் ஓடிடியில் வெளியாகும். அதை வீட்டில் இருந்தே தங்களுடைய போன் அல்லது டிவியில் பார்ப்பதை தற்போது மக்கள் வழக்கமாக்கி கொள்கின்றனர். இதனால் வெப் சீரிஸ் புழக்கமும் அதிகரித்து இருக்கிறது.

அந்த வகையில் இந்த முறை வார நாளான இன்று சில படங்கள் வெளியாகி இருக்கிறது. அதன் லிஸ்ட் குறித்த தகவல்கள் இதோ. முதலில் மேட் திரைப்படம் கல்லூரி காலத்தில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.

ஓரளவு நட்பு ரீதியா படம் பார்ப்பதில் ஆர்வம் இருந்தா கண்டிப்பா இந்த படம் பாருங்க. நெட்பிளிக்ஸில் தமிழ் டப்பிங்கில் இருக்கும் இப்படத்தின் மேட் ஸ்கொயர் விரைவில் வெளியாக இருக்கிறது. மிஸ் பண்ணாதீங்க நல்ல டைம் பாஸாகவே அமையும்.

OTT

பிரித்விராஜ் இயக்கத்தில் பிரபல நடிகர் மோகன் லால், மஞ்சு வாரியர் நடித்த திரைப்படம் லூசிபர். இப்படம் அரசியல் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது. பேன் இந்தியா படமான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனம் பெற்றது.

200 கோடிக்கும் வசூல் சாதனை செய்த இப்படத்தின் இரண்டாம் பாகம் எம்புரான் இந்த வார இறுதியில் வெளியாக இருப்பதால் கண்டிப்பாக பிரைம் ஓடிடியில் ஒரு ரீ வாட்ச்சை போட்டுடுங்க. ஆனால் இரண்டாம் பாகம் தொடர்ச்சியாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.

காக்கி தி பெங்கால் சேப்டர் வெப்சீரிஸில் ஒரு தாதாவுக்கு அடியாளா இருக்க ரவுடி , எப்டி பெரிய தாதாவா மாறுறான் என்பது தான் மொத்த கதை. செமையா எழுதி இருக்க பொலிட்டிக்கல் திரில்லர் படமாக இருக்கிறது. முதல் எபிசோட் ஒரு மாதிரி அப்டி இப்டினு போனாலும் அடுதடுத்த எபிசோட் எல்லாமும் சூப்பரா போகும். ஆனா 18+ என்பது ஒரு நெகட்டிவாக பார்த்துக்கோங்க நெட்பிளிக்ஸில் இருக்கு. 

1978 முதல் 1991 இடைப்பட்ட 13 வருடங்கள்ல கிட்டத்தட்ட 17 ஆண்களை கொலை செய்த ஜெப்ரிடாமெர் எனும் ஓர் சீரியல் கில்லரின் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட டாமெர் வெப் சீரிஸ். நெட்பிளிக்ஸில் தமிழ் டப்பிங்குடன் இருக்கு.