Bison: பைசன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!.. வசூலை அள்ளுமா?!..
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்து கடந்த அக்டோபர் 14ம் தேதி வெளியான திரைப்படம் பைசன். மாரி செல்வராஜின் முந்தைய படங்களை போலவே இந்த படமும் ஒரு சீரியஸ் சினிமாவாகவே உருவாக்கப்பட்டிருந்தது. தென் மாவட்டத்தில் வசிக்கும் கபடி வீரரான மணத்தி கணேசனின் வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதை, திரைக்கதையை அமைத்திருந்தார் மாரி செல்வராஜ்.
முந்தைய படங்களைப் போல சாதி தொடர்பான பிரச்சனைகளை அதிகம் பேசாமல் ஒரு கபடி வீரராக சாதிக்க துடிக்கும் துருவ் சந்திக்கும் பிரச்சனைகளை பேசியிருந்தார். படத்தில் இரு சாதி தலைவர்களை காட்டியிருந்தாலும் அவர்களையும் நல்லவர்களாகவே காட்சிப்படுத்தி இருந்தார். இது பலராலும் பாராட்டப்பட்டது.

பைசன் படத்திற்காக துருவ் விக்ரம் கடுமையான உழைப்பையும் போட்டிருந்தார். பல மாதங்கள் கடுமையான கபடி பயிற்சிகளை எடுத்து இப்படத்திற்காக தயாரானார். அவர்களின் உழைப்பு வீண் போகவில்லை. இந்த படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்தது. குறிப்பாக துருவ் விக்ரமின் நடிப்பையும், அவர் போட்ட உழைப்பையும் பலரும் பாராட்டினார்கள். அதோடு படம் 50 கோடிக்கு மேல் செய்தது.
இந்நிலையில் இப்படம் வருகிற 21ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது. பொதுவாக தமிழில் வெளியாகும் திரைப்படங்கள் மூன்று மூன்று வாரங்களில் ஓடிடிக்கு வந்துவிடும். ஆனால் பைசன் அதிக நாட்கள் தியேட்டர்களில் நல்ல வசூலை பெற்றதால் 5வது வாரத்தில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
