Criminal Justice 4: கள்ளக்காதலியை கொன்றது கணவனா? மனைவியா? மிஸ்ராவின் சம்பவம்… பெஸ்டா? வேஸ்டா?

by AKHILAN |
Criminal Justice 4: கள்ளக்காதலியை கொன்றது கணவனா? மனைவியா? மிஸ்ராவின் சம்பவம்… பெஸ்டா? வேஸ்டா?
X

Criminal Justice 4: பிரபல கிரிமினஸ் ஜஸ்டிஸ் நான்காவது சீசன் இறுதி எபிசோட் ஒரு வழியாக வெளியாகிவிட்ட நிலையில் இந்த சீசன் எப்படி இருக்கு என்ற பாசிட்டிவ், நெகட்டிவ் பேசும் திரைவிமர்சனம் இங்கே.

பங்கஜ் திரிபாதி நடிப்பில் வெளியான கிரிமினல் ஜஸ்டிஸ் இதுவரை மூன்று சீசன்கள் வெளியாகி இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டு குற்றவாளியாக சித்திரிக்கப்படுபவர்களுக்கு ஆதரவாக வாதாடும் வக்கீலாக மாதவ் மிஸ்ரா என்ற லாயர் ஆஜராகிறார்.

அவர் எப்படி குற்றச்சாட்டுக்களை முறியடித்து தன்னுடைய கட்சிக்காரரை காப்பாற்றினார் என்பதே மொத்த சீரிஸின் கதையாக இருக்கும். மூன்று சீசன்களுமே நல்ல வரவேற்பை பெற்றதால் நான்காவது சீசன் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது.

மற்ற மூன்று சீசன்களை போல இல்லாமல் நான்காவது சீசன் முதலி நான்கு எபிசோட்கள் மட்டுமே வெளியிடப்பட்டது. இதனால் இந்த வெப்சீரிஸின் மீது ஆர்வம் குறைந்துவிடுமோ என்ற பேச்சு எழுந்தது. ஆனால் இந்த வாரம் கடைசி எபிசோட் வெளியாகி நான்காவது சீசனும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வந்துள்ளது.

ராஜ் நாக்பால் என்ற பெரியர் மருத்துவர். அவருக்கும் மனைவி அஜ்சு நாக்பாலுக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். அவர்கள் ஒரே மகளின் ஐராவுக்கு நியோரோ சம்மந்தப்பட்ட ஒரு நோய் இருக்க அவரை பார்த்துக்கொள்ள வருகிறார் நர்ஸ் ரோஷினி.

இதில் ராஜ் நாக்பாலுக்கும், ரோஷினிக்கும் காதல் மலர இவர்கள் திருமணம் செய்துக்கொள்ளும் முடிவில் உள்ளனர். ஆனால் எதிர் அப்பார்ட்மெண்ட்டில் மனைவி அஞ்சு இருக்க இது ரோஷினிக்கும் பெரிய பிரச்னையாக இருக்கிறது. ஒரு நாள் ஐராவின் பிறந்தநாளில் சண்டை முற்றுகிறது.

காலை ரோஷினி இரத்தவெள்ளத்தில் இறந்துக்கிடக்க ராஜ் நாக்பால் கட்டிப்பிடித்து கொண்டு இருக்கிறார். போலீஸ் வந்து ராஜ் நாக்பாலை குற்றவாளி என சிறையில் அடைக்கின்றனர். ஒரு கட்டத்தில் மகள் அஞ்சு நாக்பாலும் சந்தேகப்பட்டவர்கள் லிஸ்ட்டில் சிறையில் அடைக்கப்படுகிறார்.

ராஜ் நாக்பாலுக்கு ஆதரவாக மாதவ் மிஸ்ராவும், அஞ்சுவிற்கு ஆதரவாக மந்திராவும் கோர்ட்டில் ஆஜராகின்றனர். லேகா அகஸ்தியா அரசு வக்கீலாக ஆஜராக கோர்ட் விசாரணை தொடங்குகிறது. யார் கொலை செய்தார் என்பதை கடைசி வரை தெரியவிடாமல் பரபரப்பாகவே கொண்டு சென்றுள்ளனர்.

இதில் அஞ்சு வக்கீலுக்கு படித்தவர் என்பதால் அவர் கிளைமேக்ஸில் கொடுத்த ட்விஸ்ட்டை மிஸ் பண்ணவே முடியாது. மூன்று சீசன்களை விட இந்த நான்காவது சீசன் கண்டிப்பாக பரபரப்பாக இருக்கும் என்பது தான் உண்மை. இதை மிஸ் செய்யாமல் ஹாட்ஸ்டாரில் பார்க்க தவறாதீர்கள்.

Next Story