மிஸ் பண்ணக்கூடாது டாப் 5 கிரைம் திரில்லர் படங்கள்… உடனே இத நோட் பண்ணுங்கப்பா…

by Akhilan |
OTT
X

Crime Thriller OTT: சினிமா ரசிகர்களாக இருந்தால் நீங்கள் மிஸ் பண்ணவே கூடாத கிரைம் திரில்லர் படங்களின் டாப் 10 பட்டியல் தான் இது. அது மட்டுமில்லாமல் இந்த எல்லா படங்களுமே ஓடிடியில் இருப்பதால் உங்களுக்கான செம டைம் பாஸாக அமையும் என்பதற்கும் மாற்றுக் கருத்து இல்லை.

போகன்வில்லா: ஹீரோயினுக்கு ஒரு விபத்தில் எல்லாமே மறந்துவிட அவருடைய கணவரான ஹீரோதான் அவரைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பில் இருக்கிறார். அந்த நேரத்தில் குழந்தைகள் காணபோகும் கேஸ் ஒன்றில் ஹீரோயினை விசாரிக்க வருகிறார் ஃபகத் பாசில். சோனி லைவில் இருக்கும் இப்படத்தை அதற்கு மேல் என்ன நடந்துச்சுனு பார்த்து தெரிஞ்சிக்கோங்க.

அதோ முகம்: ஹீரோயினுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க ஹீரோ செய்யும் விஷயத்தால் அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் உருவெடுக்கிறது. முதல் ட்விஸ்ட் உடைய தொடங்கி படம் முழுவதும் ட்விஸ்ட் ஆக மட்டுமே இருப்பதால் கண்டிப்பாக உங்களுக்கு இது செம என்டர்டைன்மென்ட் ஆக இருக்கும். பிரைமில் இருக்கிறது.

மெர்ரி கிறிஸ்துமஸ்: விஜய் சேதுபதி, கேத்ரீனா கைஃப் நடிப்பில் வெளியான இப்படம் நெட்பிளிக்ஸில் இருக்கிறது. ஒரு நாள் இரவில் எங்கையோ தொடங்கி அசால்ட்டாக யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டுடன் படம் முடியும் போது என்னப்பா அப்படினு இருக்கும். அலட்டல் இல்லாத கேத்ரீனா கைப் நடிப்புக்காகவே பார்க்கலாம்.

சிகந்தர் கா முகந்தர்: தமன்னா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் நடித்திருக்கும் படம். டைமண்ட் காணாமல் போக அதை விசாரிக்க வரும் போலீஸ் முடிவு எடுத்துவிட்டால் குற்றவாளி கட்டம் கட்டிவிடுவார். அப்படி ஒரு குற்றவாளியை பல ஆண்டுகளாக கண் கொத்தி பாம்பாக பார்த்து கொண்டு இருக்கிறார்.

அவரின் தன் தோல்வியை சிம்பிளாக ஒப்புக்கொண்டு அவர் கையாலேயே பிரச்னையை முடித்தும் விடுகிறார். அங்க தான் ட்விஸ்ட்டே. திருடனவன் நிலைமை தான் கொடுமையப்பா. இப்படமும் நெட்பிளிக்ஸில் இருக்கிறது.

ஒரு நொடி: புது டீமுடன் முக்கிய வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கரும் நடித்திருக்கிறார். இரண்டு கொலைகள் யார் செய்தார்? என்ன ஆனது என்பதுதான் மொத்த கதையின் மையப்புள்ளி. கடைசியில் கொலை செய்தவர் மேலயே இரக்கம் வரும் அளவுக்கு கிளைமேக்ஸ் நம்மை கலக்கிவிடும். பிரைம் ஓடிடியில் இப்படம் இடம்பெற்றுள்ளது.

Next Story