ஓடிடியில் முந்திய விஜய்யின் கோட்!.. லால் சலாம் போல பிரச்சனையில் சிக்கிய தங்கலான் ஓடிடி ரிலீஸ்!..
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் திரைப்படம் நாளை அக்டோபர் 3-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. செப்டம்பர் 5-ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான லியோ படத்தை விட மிகப்பெரிய வசூல் வேட்டையை இந்த படம் அள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிகபட்சமாக 440 கோடி ரூபாய் வசூலுடன் தியேட்டரில் படத்தின் ஓட்டம் நின்றுவிட்டது.
கோட் திரைப்படம் சரியாக ஒரு மாத காலத்திற்குள் அதாவது நான்கு வாரத்திற்குள் ஓடிடியில் முன்னதாகவே பெரிய தொகைக்கு விற்கப்பட்ட நிலையில், நாளை வெளியாகிறது.
ஆனால், கோட் படத்திற்கு முன்னதாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான சீயான் விக்ரமின் தங்கலான் திரைப்படம் இன்னமும் ஓடிடியில் வெளியாகவில்லை.
சமீபத்தில் நடைபெற்ற இயக்குனர்களின் ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் வெற்றிமாறன், கரண் ஜோஹர் உடன் இணைந்துக் கொண்டு பா. ரஞ்சித் பேசிய போது, ஓடிடியில் ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடப்படுவதாக கூறினார்.
மாட்டுக்கறி சாப்பிடும் காட்சி இருந்தால் கூட பிரச்சனை ஏற்படுகிறது என பேசியிருந்தார். தங்கலான்படத்திலும் எருமை மாடு ஒன்றை வெட்டிச் சாப்பிடும் காட்சியை பா. ரஞ்சித் வைத்திருப்பார். அதனால், தான் இன்னமும் அந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தாமதம் ஆகிறதா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
ரஜினிகாந்த் கேமியோவாக நடித்த லால் சலாம் திரைப்படம் இன்னமும் ஓடிடியில் வெளியாகவில்லை. சமீபத்தில் ஹார்ட் டிஸ்க் எல்லாம் கிடைத்து விட்டது என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன நிலையிலும் அதன் ஓடிடி ரிலீஸ் தள்ளிப் போக என்ன காரணம் என்று தெரியவில்லை.
விரைவில், தங்கலான் மற்றும் லால் சலாம் படங்கள் ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தியேட்டரில் வெளியான தங்கலான் திரைப்படம் தனுஷின் ராயன் திரைப்படம் அளவுக்கு கூட வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.