தியேட்டரில் கல்லா கட்டாத தளபதியின் 'GOAT'... பொசுக்குன்னு ஓடிடி-க்கு இறங்கிட்டாங்களே...!
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் த்ரிஷா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார்.
இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியானது முதலே இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. மேலும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், தோனி போன்றவர்கள் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி இந்த திரைப்படத்தில் காட்டி இருந்தார்கள்.
இப்படம் திரையரங்குகளில் வெளியாகி மொத்தம் 25 நாட்களை கடந்து தற்போது வரை திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. பொதுவாக பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீசுக்கு முன்பே ஓடிடிக்கு மிகப்பெரிய தொகைக்கு விற்கப்படுவது வழக்கம் தான். அந்த வகையில் இந்த திரைப்படம் திரையரங்களில் வெளியாவதற்கு முன்பே netflix-க்கு விற்கப்பட்டது. அப்படிதான் தற்போது கோட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதத்திற்குள் ஓடிடிக்கு மாறுகிறது.
இந்த திரைப்படம் இவ்வளவு சீக்கிரம் ஓடிடிக்கு வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், ஓடிடியில் திரைப்படத்தை பார்க்கலாம் என்று ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். படம் வெளியாகி 25 நாட்களில் வெறும் 460 கோடி ரூபாய் மட்டுமே வசூலை ஈட்டி இருக்கின்றது. ஆனால் இப்படம் வெளியாவதற்கு முன்பு படத்தில் நடித்த பிரபலங்கள் மற்றும் தயாரிப்பாளர், இயக்குனர் என அனைவரும் இந்த திரைப்படம் கட்டாயம் ஆயிரம் கோடியை தொடும் என்று கூறியிருந்தார்கள்.
இது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்து இருந்த நிலையில் படம் 500 கோடியை கூட தொடவில்லை என்பதுதான் உண்மை. திரையரங்குகளில் இருந்து தற்போது netflix-யில் இந்த திரைப்படம் அக்டோபர் 3-ம் தேதி வெளியாக உள்ளது. விஜயின் கோட் திரைப்படத்தை ஓடிடியில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.